dinakaran still riding in horse with difference of 33489 votes behind admk candidate
ஆர்.கே.நகரில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை முதலே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுவரை 15 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், இன்னமும் 4 சுற்றுகளே மீதமுள்ள நிலையில், இதுவரை சுயேச்சையாகப் போட்டியிட்ட தினகரனே முன்னிலை பெற்று வருகிறார்.
மொத்தம் 19 சுற்று வாக்கு எண்ணிக்கை உள்ள நிலையில், இப்போது தினகரன் பெற்றுள்ள வாக்குகளில் பாதி அளவுக்கும் சற்று அதிகமாகத்தான் அதிமுக., வேட்பாளர் மதுசூதனன் பெற்றுள்ளார்.
தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனனைக் காட்டிலும் 33,489 வாக்குகள் அதிகம் பெற்று 15-வது சுற்றிலும் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.
ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் :
டிடிவி தினகரன் ( சுயேச்சை ) : 72,518
மதுசூதனன் ( அதிமுக ) : 39,029
மருதுகணேஷ் ( திமுக ): 20493
மொத்த வாக்காளர்கள் 2,28,234 ; பதிவான வாக்குகள் 1,76,885
வாக்குப் பதிவு செய்த ஆண்கள் 83,994
வாக்குப் பதிவு செய்த பெண்கள் 92,867
வாக்குப் பதிவு செய்த மூன்றாம் பாலினத்தவர் 24
சென்னை ராணி மேரி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
