Asianet News TamilAsianet News Tamil

பாராளுமன்ற தேர்தலுக்கான வேலைகளை தொடங்கினார் தினா!! பொறுப்பாளர்களை அறிவித்து அதிரடி...

Dinakaran start his work for Parliament election
Dinakaran start his work for Parliament election
Author
First Published Jul 19, 2018, 11:09 AM IST


நாடாளு மன்றத்தேர்தல் நெருங்கிவரும் வேலையில் பூத் கமிட்டிக்களை அமைக்கும் பணிகளையும் விரிவுபடுத்துமாறு  நிர்வாகிகளுக்கு  உத்தரவிட்ட தினகரன், அடுத்து தேர்தல் பணிக்குழு மண்டலப் பொறுப்பாளர்களை அறிவித்து தனது அடுத்த அதிரடியை ஆரம்பித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும் 15 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவது என்றும் தினகரன் முடிவெடுத்துள்ளதாக வெளியான வெளியானது.

தேர்தலுக்கு தயாராகும் வகையில் அனைத்து கட்சி தலைவர்களும் தங்களை தயார் படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தினகரனும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகத்தை கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டார். அது நாடாளுமன்ற தேர்தலை கூட்டணியுடன் எதிர்கொள்வது என்பது தான் தினகரனின் திட்டம். 

அந்த வகையில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கு எதிரான கட்சிகளில் வலுவான கட்சிகளை மட்டும் சேர்த்துக் கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் களம் காணலாம் என்று தினகரன் வியூகம் வகுத்துள்ளார். இதனை தொடர்ந்து கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 20 எம்.பி. இடங்களையாவது வெல்ல வேண்டும் என்கிற இலக்கை தினகரன் நிர்ணயித்துள்ளார்.

எனவே குறைந்தபட்சம் 25 தொகுதிகளிலாவது அ.ம.மு.க. போட்டியிட வேண்டும். அதேபோல கூட்டணி கட்சிகளுக்கு சற்று தாராளமாக 15 தொகுதிகள் வரை கொடுக்கலாம் என்பதே தினகரனின் கணக்கு.

அந்த வகையில் அ.ம.மு.க. போட்டியிட்டால் வெற்றி என்று உறுதியாக தெரியும் 25 தொகுதிகளை தற்போதே கணக்கு எடுக்க ஆரம்பித்துவிட்டார் தினகரன். தற்போது  தமிழகம் முழுவதும்   சுற்றுப்பயணத்தில் இருக்கும் தினா   கட்சிக் காரர்களிடமும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தே விவாதித்து வருகிறார்.

மேலும் தற்போதே பூத் கமிட்டிக்களை அமைக்கும் பணிகளையும் விரிவுபடுத்துமாறு தினகரன் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் வேட்பாளர்களை அறிவித்துவரும்  தினகரன், தமிழகத்தை ஆறு மண்டலமாக பிரித்து நிர்வாகிகளை அறிவித்து தனது அடுத்த அதிரடியை துவங்கியுள்ளார் தினகரன்.

Dinakaran start his work for Parliament election

தினகரன் வெளியிட்டுள்ள பட்டியலில், மண்டலம் 1 ல்  பி.பழனியப்பன், எஸ்.கே செல்வம், வி.சுகுமார் பாபு உள்ளிட்ட மூன்று  பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாவது மண்டலத்தில், எஸ் அன்பழகன், ஜி. செந்தமிழன், என்.ஜி பார்த்திபன் பொறுப்பாளர்களாக தேர்தல்பணியை கவனிப்பார்கள்.

மூன்றாவது மண்டலத்தில், செந்தில் பாலாஜி, சேலஞ்சர் துரை @ ஆர் துரை சாமி அறிவிக்கபட்டுள்ளார்கள்.

Dinakaran start his work for Parliament election

அடுத்ததாக ரெங்கசாமி, சிவா ராஜமாணிக்கம், விடி கலைச்செல்வன் நான்காவது மண்டலப் பொறுப்பாளர்களாக அறிவிக்கபட்டுள்ளார்கள்.

தங்க தமிழ்செல்வன், ஆர். மாரியப்பன் கென்னடி இவர்கள் இருவரும் ஐந்தாவது மண்டல பொறுப்பாளர்கள்.

எஸ்.வி.எஸ்.பி மாணிக்க ராஜா, ஆர்.வி ஆதித்தன் இவர்கள் ஆறாவது மண்டல பொறுப்பாளர்களாக தேர்தல் பணியை கவனிப்பார்கள் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios