ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மீண்டும்  வெளியில் வந்த தினகரன்,  சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா ஜெயிலுக்கு போகும் முன் தனது அக்காள் மகனான தினகரனை கட்சியில் சேர்த்து துணைப் பொதுச்செயலாளர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து  இலை சின்னம் வாங்க லஞ்சம் கொடுத்ததாக புகாரை அடுத்து கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் இருந்தார்.

சிறையிலிருந்து வருவதற்கு முன்பே, தினகரனை கட்சியிலிருந்து தூக்கியடித்த பிறகு பிறகே தனியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய தினகரனின் செல்வாக்கு எப்படி இருக்கிறது? அவருக்கான பலம் என்ன? அதிமுகவிலிருந்து பிரிந்து வந்த நிர்வாகிகளை வைத்து தொடங்கப்பட்ட தினகரனின் கட்சி மக்கள் மத்தியில் எந்தளவிற்கு எடுபடும்?

தமிழகத்தின் மிகப்பெரிய ஆளுமைகளான  ஜெயலலிதா மறைவு, ஆக்டிவ்வானா கருணாநிதி செயல்படாமல் போனது என  தமிழக அரசியலில் மிகப்பெரிய  வெற்றிடம் உருவாகி உள்ளதாக பலர் கூறி வருகின்றனர். உண்மையில் அப்படியோரு அரசியல் வெற்றிட சூழல் தமிழகத்தில் நிலவுகிறதா? இல்லை வழக்கம்போல கிளப்பிவிடப்படும் கட்டுக்கதைகளா? 18 எம்எல்ஏக்கள் வழக்கு ஒரு பக்கம், இதனால் நிலவும் அரசியல் ஸ்தரமற்ற நிலையில் பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளன.

பல்வேறு குழப்பங்கள் நிறைந்த தமிழக அரசியல் சூழலில், ஏசியா நெட் தமிழ் டாட்காம் சார்பில்  பல்வேறு கேள்விகளை முன் வைத்து . தமிழக அரசியல் களத்தில் எந்த கட்சியையும் சாராத மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது? இதை அறிய, AZ ரிசர்ச் பார்ட்னர்ஸ் என்ற அமைப்பு, தமிழகம் முழுவதும் 11,691 பேரிடம் கருத்து கேட்டு அதன் முடிவை வெளியிட்டுள்ளது. 

இந்த அதிரடியான சர்வே ரிசல்ட்க்கு முன்பாக தினகரனின் பலம் என்ன என்பதை பார்ப்போம்...

ஒன்றரை கோடி தொண்டர்கள், இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சி, தற்போது தமிழகத்தை ஆளும் கட்சி என இவ்வளவு பெரிய பலம் இருந்தாலும், ஒரு இடைதேர்தல், சுயேச்சை வேட்பாளர், அதுவும் புதிய சின்னம் எப்படி இந்த படுதோல்வி? அதிமுக அரசையே ஆட்டம் காண வைத்தது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்.

கட்சியின் சின்னமான இரட்டை இலை கிடைத்துவிட்டால் போதும், அம்மா ஏற்கனவே ஜெயித்த தொகுதி, வேட்பாளராக மண்ணின் மைந்தன் மதுசூதனன், கூடுதலாக ஆளுங்கட்சி பலம், எதிராளியை சமாளிக்க வாக்களர்களுக்கு பணம் என்ற ரீதியின், கொஞ்சம் அலட்சியமாக இருந்தது அதிமுக, இரட்டை இலை கிடைத்தால் தான், தேர்தல்ல நிற்கணும் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் தினகரனோ, இரட்டை இலை கிடைக்கலைன்னாலும் நாம தேர்தலில் நிக்கணும். அது தொப்பியா இருந்தாலும், இல்ல வேற எதுவுமா இருந்தாலும்” என்று சொல்லியிருந்தார் . முதல்கட்டமாக திருச்சி கூட்டம் முடிந்த கையோடு ஆர்.கே.நகரில் யாருக்கும் தெரியாமல் தனது களப் பணிகளைச் செய்ய ஆரம்பித்தார் தினகரன்.

ஏற்கனவே, தொப்பி சின்னத்தில் வாக்குகேட்டபோது சுமார் 90 கோடியை கொட்டிய தினகரனின் பெயர் தொப்பியோடு ஒட்டிக்கொண்டது. இப்போது தொப்பியில்லை தினகரன் என்ற பெயர் மட்டும் போதும், வேறு சின்னம் என்ன அதுதான் அனைவரின் பிரஷரையும் எகிற வைத்த பிரஷர் குக்கர். சரி, ஆளும் கட்சியின் வேட்பாளரை சமாளிப்பது எப்படி?  எந்த நுணுக்கங்களை இம்ப்ளிமென்ட் செய்வதில் வல்லவர் தினகரன்.

ஆனால், அதிமுக.,வினர் சிலர் இப்போது புலம்புவதுதான் வேடிக்கையான ஒன்று. அது அதிமுக.,வுக்கு என்றே வாக்களிக்கும் விசுவாசிகளும் கூட, தினகரனுக்கு ஓட்டு  போட்டது தான் தினகரனுக்கான பலமாக மாறியது. 

தமிழகத்தின் மத்தியில், திமுகவை பொறுத்தவரை 36 சந்தவிகிதமும், அதிமுக ஓபிஎஸ் - ஈபிஎஸ் 27 சதவிகிதங்களும் அடுத்ததாக ரஜினி, கமல், பாட்டாளி மக்கள் கட்சி, விஜயகாந்த் என இவர்களை அடுத்தே தினகரன் உள்ளார். 

மண்டலங்கள் வாரியாக நடத்தப்பட்ட இந்த சர்வே முடிவில், தமிழகத்தின்   1 சதவிகிதமும், தலைநகரான சென்னையில் 2 சதவிகிதம், வட தமிழகத்தில் பாஜகவிற்கு அடுத்த இடத்திலுள்ள  தினகரன், மேற்கு மாவட்டங்களில் கணிசமாக 2 சதவிகித வாக்கு கிடைக்கும் என சர்வே ரிசல்ட் சொல்கிறது.

கூட்டணி வைத்தால்?

அதிமுகவிலிருந்து பிரிந்து வந்த தினகரன் ஒருவேளை ஓபிஎஸ் - ஈபிஎஸ் உடன் கூட்டணி சேர்ந்தால் 29 சதவிகித வாக்குகள் கிடைக்கும்,  இதே கூட்டணியில் பாஜகவை சேர்த்துக் கொண்டால் 31 சதவிகிதங்கள் இந்த கூட்டணிக்கு கிடைக்கும். இந்தக் கூட்டணியில் மேலும் ரஜினியை சேர்த்துக்கொண்டால் 42 சதவிகிதம் கிடைக்கும், அதிமுகவை விட்டுவிட்டு பாஜகவுடன் சேர்ந்தால்  வெறும் 4 சதவிகிதமே கிடைக்கும் என சர்வே ரிசல்ட் முடிவில் தெரிகிறது.