அமமுகவிலிருந்து செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், வி.பி.கலைராஜன், இசக்கி சுப்பையா வரிசையில் பெங்களூரு புகழேந்தியும் விரைவில் இணையலாம் என்ற தகவல் தினகரனுக்கு வரவே வீடியோ 20 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி சமூகவலைத்தளத்தில் ரவுண்டடிக்கிறது. 

சசிகலா குடும்ப விஸ்வாசியான பெங்களூரு புகழேந்தி, சமீப காலமாக தினகரன் மீது பயங்கர கோபத்தில் இருப்பது வைரலாக வீடியோவை வைத்து பார்க்கும் போதே தெரிகிறது. அதிலும், தினகரனை "அட்ரஸ் இல்லாம 14 வருஷம் வெளியில் இருந்த தினகரன ஊருக்கு காமிச்சது இந்த புகழேந்திதான். உண்மைச் சொல்லனும்னா அம்மா இறந்தப்பக் கூட அவரு கிடையாது" என தினகரனின் இமேஜை டேமேஜ் செய்யும் விதமாக பேசியது பயங்கர கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் அதில் கட்சி தாவு வதற்கு முன்பாக, போகுற இடத்துலையும் இருக்கிற இடத்துலயும் நமக்கு முகாந்திரம் இல்லாமல் இருக்கக் கூடாது. நமக்கான சரியான பொசிஷனையும், ஃப்யூச்சரையும் சரி பன்னிட்டு தான் போகனும். அந்த ஐடியாவோட தான் இருக்கிறேன். என்னோட லிஸ்ட்ல உங்களையும் சேர்த்துகிறேன் என பிளான் போட்டதும் தெரிகிறது.

ஆனால், இந்த வீடியோவை பார்த்ததும் அவர் சொன்னதை கேட்டதும் டென்ஷானான தினகரன் உடனடியாக தனது புதிய படைத்த தளபதி, வழக்கமாக இதுபோல வீடியோவை வெளியிடும் வெற்றிவேலை வைத்து ரிலீஸ் பண்ணாமல் ஐடி டீமின் வழியாக ரிலீஸ் செய்து முதலில் சமூக வலைதளைங்களில் டேமேஜ் செய்ய வைத்துள்ளார்.

பத்து நாளைக்கு முன்னாடி எடுத்த இந்த வீடியோவை உடனே, இப்போ ரிலீஸ் பண்ண வேண்டிய அவசியம் என்ன என்று அமமுகவினரே குழம்பி தவிக்கும் நிலையில், புகழேந்தி கட்சி மாறப்போகிறார் என்று தினகரனிடம் தகவல் போக, இதனால், இந்த வீடியோவை இப்போ ரிலீஸ் பண்ணால், கட்சி தாவும் புகழேந்தியின் இமேஜை டேமேஜ் செய்துவிடவே, அமமுகவின் ஐடி விங் பிளான் போட்டு இந்த வீடியோவை ரிலீஸ் செய்திருக்கிறது.

இது புதுசு ஒன்னும் இல்ல, ஆண்டிபட்டி தங்கம் அமமுகவிலிருந்து வெளியேறும்போது, அவர் தினகரனை விமர்சிக்கும் ஆடியோவை ரிலீஸ் செய்து டேமேஜ் செய்தது அதே டீம்தான். காரணம் அவர்கள் தாவும் கட்சியில் அந்த தலைவர்களையும் இப்படி அசிங்க படுத்துவார்களோ என்று அக்கட்சி தொண்டர்களும் தலைமையும் வெறுப்பாக இப்படிசெய்கிறார்களாம், இதேபோல, இவர்கள் கைவசம் இப்படி பல பேரின் வீடியோக்கள் இருப்பதாக சொல்கிறார்கள். கட்சி மீது அதிருப்தியில்  இருப்பவர்களை தூக்கி அடிக்க இந்தமாதிரி யுக்தியை கையாளுகின்றனர் என்று புலம்பி தள்ளுகிறது புகழேந்தி கோஷ்டி.