கடந்த, 2017ல், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட தினகரன், அதே ஆண்டு, டிசம்பரில் நடந்த, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக வெற்றி பெற்றார்.  அந்த தேர்தலில் ஆளும்கட்சியும், பலம் வாய்ந்த எதிர்க்கட்சியை மீதி பிரமாண்ட வெற்றியை அடைந்தார் தினகரன். அதிமுக.,வுக்கு என்றே வாக்களிக்கும் விசுவாசிகளும் கூட, தினகரனுக்கு ஓட்டு போட்டதால் தான் இத்தகைய  வெற்றியை தினகரன் பெற முடிந்தது. அதற்காக, தினகரன் அடிக்கடி சொல்லும் ஸ்லீப்பர் செல்கள் அதிமுக.,வில் வேலை செய்தனராம். அதிமுக.,வுக்கு  வாக்களிக்கும் நபர்களைக் கண்டறிந்து, அவர்களில் ஒரு லட்சம் பேருக்கு தலா ரூ.6 ஆயிரம் ஒதுக்கி, ஒரு லட்சம் ஓட்டுகளும் அதிமுக.,வுக்குக் கிடைக்க வேண்டும் என்று வேலை செய்வதாக ஒரு செய்தி பரப்பப் பட்டது. அப்போது, அதிமுக., விசுவாசிகளிடமே போய் தினகரன் ஆதரவாளர்கள் ஒரு புரளியைப் பரப்பினார்கள். 

அதாவது, அதிமுக., சார்பில்  அந்த வீட்டில் உள்ளவங்களுக்கு ஒருவருக்கு 6ஆயிரம் வீதம், 4 பேருக்கு 24 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்காங்க.. நீங்க இவ்ளோ தூரம் அதிமுக.,வுக்கு விசுவாசியா இருக்கீங்க. ஆனா உங்களுக்குக் கொடுக்காம, அவங்களுக்கெல்லாம் கொடுத்திருக்காங்க... என்று, அதிமுக., விசுவாசிகளை சரியாகக் கண்டறிந்து புரளி பரப்பினார்களாம். இதனால், தங்களுக்கு பணம் கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில், அதிமுக.,க்கு ஓட்டு போட்டு வந்த பலர் தினகரனுக்கு மாற்றிப் போட்டதாகக் கூறியுள்ளனர்.  இந்த பிரமாண்ட வெற்றியால், 2018 மார்ச்சில், அமமுகவை துவங்கினார்.

ஒரு ஒரு வெற்றியால் கட்சியை துவங்கி நடத்திக்கொண்டு வந்த தினகரனுக்கு செந்தில் பாலாஜி திமுகவிற்கு சென்றதை  தொடர்ந்து, பல சிக்கல் அதில், இரட்டை இலை சின்னம் வழக்கில் தோல்வி, குக்கர் சின்னம் கிடைக்காதது, உறவினர்களின் எதிர்ப்பு போன்ற பல காரணங்களால், தினகரன் டென்க்ஷனில் இருக்கிறாராம். 

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட, முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கொடுத்தான், செலவுக்கு காசு இல்லாததால், நைசாக அனைவரும் ஒதுங்கி விட்டார்களாம். இதனால், தேர்தல் செலவுக்கு காசு கொடுக்க ரெடி எனக் சொன்னவர்களுக்கு, நேர்காணல் இன்றி வேட்பாளர், சீட் ஒதுக்கப்படுகிறது. அதேசமயம், ஆர்.கே நகர் பார்முலா, வர்ற தேர்தலில் கைகொடுக்குமா என்றால் அதுதான் சந்தேகம்.
 
காரணம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், வெற்றிக்கான வியூகம் முதல்முறை தேர்தல் ரத்தாகும் முன்பே தாயார் செய்யப்பட்டது. மொத்த வாக்காளர்களின்  லிஸ்ட் எடுத்து சுமார் 2,000 பேருக்கு, ஒரு நிர்வாகி பொறுப்பேற்றார். அதில், 25 வாக்காளர்களுக்கு, ஒரு நிர்வாகி , 80 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

ஒவ்வொருவரும், தனக்கான, 25 வாக்காளர்களை தினமும் நேரடியாக சந்தித்து, குக்கர் சின்னத்தில் ஓட்டுப்போட சொல்லி வந்தார்கள். அவர்களுக்கு, நாள் ஒன்றுக்கு, 400 லிருந்து, 700 ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது, இப்படியெல்லாம் பணம் கொடுக்கும் நிலையில், தினகரன் இல்லை என்பதால் அது சாத்தியமே இல்லை என சொல்லப்படுகிறது.