dinakaran plans implement More then soon
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற டிடிவி தினகரன் இன்று தொகுதி சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைத்தார். அவரது ஆதரவு மக்கள் திரளாக வந்து மலர் தூவி ஆரத்தி எடுத்து பூரன கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஆர்.கே.நகர் தொகுதியில், குடிநீர் வழங்க வார்டு வாரியாக இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரிய மேலாண் இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளேன் இதுதான் சட்டமன்ற உறுப்பினராக நான் செய்த முதல் பணி. தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என தெரிவித்தார்.
தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் இதோ:
•57000 புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.
•ஆர்.கே.நகரில் உயர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்.
•இளைஞர்களுக்கான உடற்பயிற்சிக் கூடம் அமைத்து தரப்படும் •வாரத்தோறும் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும்.
•ஆர்.கே. நகர் மக்களின் குறை தீர்க்க புதிய செயலி அறிமுகப்படும்.
•மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு வங்கிகளின் கடன்.
•கொடுங்கையூர் குப்பைக்கிடங்கு நவீனமயமாக்கப்படும்.
•அரசு, தனியார் வங்கிக் கிளைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
• நவீனமயமாக்கப்பட்ட மீன் அங்காடி அமைக்கப்படும்.
• ஐஓசி பேருந்து நிலையம் தரம் உயர்த்தப்படும்.
• கொருக்குப்பேட்டையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படும்.
• 117 கோடி செலவில் எண்ணூர் - மணலி இடையே மேம்பாலம் அமைக்கப்படும் என இவ்வாறு தெளிவாக பேட்டி அளித்துள்ளார். இப்படி தனது தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் இந்த தொகுதிக்கு செஞ்சி கொடுக்கணும்.
சட்ட சபைக்கு போவதற்கு முன்னாடி தொகுதியில் அலுவலகம் திறக்கனும் இவ்வாறு தனது ஆதரவாளர்களிடம் கூறி வருகிறாராம்.
