dinakaran meeting with sasikala in prison

தனது ஆதரவளர்கள் முதலமைச்சரை சந்தித்து பேசி வரும் வேளையில், டிடிவி தினகரன் சசிகலாவை சந்தித்து ஆலோசித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் அடுத்தடுத்து பல்வேறு கட்ட குழப்பங்களும் அதிர்வலைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இரட்டை இலை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிறைக்கு சென்று திரும்பிய தினகரனை கட்சியில் சேர்க்க கூடாது என எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது.

ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த டிடிவிக்கு அதிமுகவை சேர்ந்த 34 எம்.எல்.ஏக்கள் நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

மேலும் கட்சி பொறுப்பிலிருந்து தினகரனை நீக்க யாருக்கும் உரிமை இல்லை எனவும் பேட்டி அளித்து வருகின்றனர்.

இதனிடையே அதிமுக எம்.எல்.ஏ சரவணன் கூவத்தூர் பேரம் குறித்த வீடியோ ஒன்றையும் ஆங்கில தொலைகாட்சி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இணைவதாக இருந்த பன்னீர் செல்வம் அணியும் எடப்படியை விட்டு விலகி சென்றுள்ளது.

இந்நிலையில், இன்று 2 வது நாளாக நடைபெற்ற சட்டசபை கூட்டம் முடிவுற்றதும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தினகரனிடம் இருந்து கட்சி பொறுப்பை பிடுங்ககூடாது என வலியுறுத்த உள்ளதாக தெரிகிறது.

எம்.எல்.ஏக்கள் எடப்பாடியுடன் ஆலோசனை நடத்திகொண்டிருக்கும் நிலையில் தற்போது பெங்களூரு சிறையில் இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார் தினகரன்.

இப்ப என்ன பூகம்பத்த கிளப்ப போறாருன்னு தெரியவில்லை. பொறுத்திருந்து பாப்போம். 

சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு சசிகலாவை தினகரன் இரண்டாவது முறை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.