dinakaran is going to take oath as RK Nagar MLA by Speaker Dhanapal

ஆர்.கே.நகர் இடைதேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன் இன்று பதவியேற்றுக் கொள்கிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளை எதிர்த்து குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் தினகரன் அமோக வெற்றிபெற்றார்.

இந்நிலையில், முதன்முதலாக MLA ஆகி சட்டசபைக்குள் நுழைய இருக்கும் தினகரன், அடுத்தக்கட்டமாக மெல்ல, மெல்ல கட்சியை கைப்பற்றிவிடுவார் என பதற்றம் அதிமுக அமைச்சர்கள் மற்றும் MLA க்களிடம் தொற்றியுள்ளது. இன்று மதியம் 1.00 மணிக்கு தினகரன் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க உள்ளார். தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் அறையில் அவர் பதவி ஏற்றுக் கொள்வார். சபாநாயகர் தனபால் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

தினகரன் பதவியேற்ப்பதை கொண்டாட அவரது ஆதரவாளர்கள் முன் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். தினகரனுக்கு ஆதரவளித்ததால் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் தினகரன் படவிஎர்க்க வரும்போது தலைமை செயலகத்துக்கு வருகிறார்களாம். மேலும், தினகரன் பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் சில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்பார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து, வரும் ஜனவரி 8-ஆம் தேதி தமிழக சட்டபேரவை கூட்டத்தொடரில் தினகரனும் கலந்து கொள்ளவிருப்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இந்நிலையில், நேற்று பெங்களுரு பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலாவை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய தினகரன், அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கட்சியை வளர்க்க வேண்டுமானால் நேர்மையாக அரசியல் செய்ய வேண்டும். முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் ஆடிட்டர் குருமூர்த்திக்கு பயந்து செயல்படுகின்றனர் என்றார்.