dinakaran inaugurates as mla
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏவாக தலைமை செயலகத்தில் தினகரன் பதவியேற்றார்.
கடந்த 21ம் தேதி நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டார். வாழ்வா சாவா என்ற நிலையில் இந்த தேர்தலை எதிர்கொண்ட தினகரன், ஆளுங்கட்சியான அதிமுக வேட்பாளர் மதுசூதனனைவிட 40707 வாக்குகள் அதிகம் பெற்று அபார வெற்றி பெற்றார்.
இதையடுத்து முதன்முறையாக சட்டசபைக்கு செல்லும் தினகரன், தலைமை செயலகத்தில் இன்று எம்.எல்.ஏவாக பதவியேற்றார். அடையாறில் உள்ள தனது இல்லத்திலிருந்து தலைமை செயலகத்திற்கு ஊர்வலமாக வந்த தினகரன், தலைமை செயலகத்தில் எம்.எல்.ஏவாக பதவியேற்றார். தினகரனுக்கு சபாநாயகர் தனபால், எம்.எல்.ஏவாக பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
தினகரனுடன் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களும் சென்றனர்.
