பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க டிடிவி தினகரன் பெங்களூர் செல்கிறார். 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார். முதலமைச்சராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். 
ஆனால் சசிகலாவின் முதலமைச்சர் பதவி ஆசையால் பதவி விலகிய பன்னீர் அதிமுகவை இரண்டாக உடைத்தார். 

இதையடுத்து சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். முன்னதாக எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராகவும், டிடிவி தினகரனை துணை பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்து விட்டு சென்றார். 

ஆனால் சசிகலாவின் பதவி ஆசை தினகரனையும் தொற்றி கொண்டு விட்டது. ஆதலால் பன்னீருக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடி எடப்பாடிக்கும் தொடர்ந்தது. 

இதனால் தமிழக அமைச்சரவையை எடப்பாடி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். இதற்கு டிடிவி தரப்பு ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
அனைத்துயும் முறியடித்து எடப்பாடி தலைமையிலான அரசு தமிழகத்தை ஆண்டுவருகிறது. 

இதனிடையே டிடிவி பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தி வருவது வழக்கம்.

அதேபோல், தற்போதைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க டிடிவி தினகரன் பெங்களூர் செல்கிறார்.