இரட்டை இலை சின்னத்திற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், திகார் சிறையில் இருக்கும் தினகரன், தற்போதைக்கு தன்னை ஜாமினில் எடுக்க வேண்டாம் என்று வழக்கறிஞர்களிடம் கூறி உள்ளாராம்.

தேவையற்ற வகையில், பத்திரிகைகளில், தலைப்பு செய்தியாக வர விரும்பவில்லை என்றும், கொஞ்ச நாள் சிறையிலேயே அமைதியாக இருக்கலாம் என்று அவர் விரும்புவதாகவும்  கூறப்படுகிறது.

வெளிநாட்டு கைதிகள் அடைக்கப்பட்டுள்ள  பிளாக்கில்  அவர் அடைக்கப்பட்டாலும், அவருக்கு போதுமான அளவு சிறை காவலர்களால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வருமானவரி செலுத்துபவர் என்பதால், அவருக்கு வசதியான பிரிவே ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறையில் கொடுக்கப்படும் உணவுகளை விட, வெளியில் இருந்து வரும் உணவுகளையே அவர் அதிகம் சாப்பிடுகிறார். சரியான நேரத்தில் தூங்குகிறார்.

அங்கு பணியாற்றும் தமிழகத்தை சேர்ந்த சில அதிகாரிகள் அவருக்கு தேவையான உதவிகளை செய்து தருகின்றனர். அரசியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை அவர் அதிகம் படித்து வருகிறார்.

சிறையில், தனியாக இருப்பது அவருக்கு சற்று சிரமமாக இருப்பதால், அவருடைய நண்பர் மல்லிகார்ஜுனாவையும், அவரோடு தங்க வைப்பதற்கு முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

திகார் சிறை, வழக்கில் அலைக்கழிக்கப்பட்ட நாட்கள், விசாரணையின்போது போலீசார் நடந்து கொண்ட விதம் ஆகியவை அவருக்கு மன வேதனையை தந்துள்ளது.

ஆனாலும், இப்போதைக்கு தேவை, எந்த தொடர்பும் இல்லாத அமைதி என்பதால், இப்போதைக்கு ஜாமீன் தேவை இல்லை என்று, தினகரன், தமது வழக்கறிஞர்களிடம் உறுதியாக கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.