விசாரணை கமிஷன் அமைக்க காரணமாக இருந்தவர். அவர் செய்த பாவங்கள் அவரை விடாது. இன்னும் தொடரும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய  தினகரன்: ஒரு ராணுவ அமைச்சர், அதிலும் ஒரு பெண் முதன் முதலாக ராணுவ அமைச்சராக இருந்தவர் என்பதால் பெருமைப்பட்டோம். தமிழ் பேசுகிறவர். ஆனால் அவரே இப்படி செய்துள்ளார்.

இந்திய மக்கள் இதை கவனித்து வருகிறார்கள். மக்களை முட்டார்கள் என்று நினைத்தால் தேர்தலில் அது எதிரொலிக்கும்.முதல்வராக திட்டம்இதைவிட பெரிய காமெடி என்னவென்றால், நிர்மலா சீதாராமன்தான், தமிழக முதல்வர் வேட்பாளராக திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

அதனால் தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்பதற்காக, முதல்வராக வேண்டும் என்பதற்காகத்தான், பன்னீர் செல்வத்திற்கு உதவிகள் செய்துள்ளார். 2 விஷயம் இதில் தெரிகிறது.

'அமைதிப்படை' பன்னீர்செல்வம் மிஸ்டர் க்ளீன், பெரிய தலைவர் என்றெல்லாம் நீங்கள்  எடுத்து காட்டினீர்கள். பன்னீர்செல்வம் பாஜக சேவகர் போல மாறியதால்தான், ஜெயலலிதா மரணமடைந்த பிறகு, முதல்வராக இருந்த அவரை, மாற்ற வேண்டியதாயிற்று. சோஷியல் மீடியா அட்டாக்சோஷியல் மீடியாவில் அப்போது பன்னீர்செல்வத்தை தேவதூதர் போல போக்கஸ் செய்தனர்.

ஆனால் பன்னீர்செல்வம் ஒன்றும் இல்லை என்பது எனக்கு தெரியும். இன்று அது வெளிப்பட்டுள்ளது. அதே சோஷியல் மீடியா இன்று பன்னீர் செல்வத்தை அட்டாக் செய்கிறது. நிர்மலா சீதாராமனை அவர் காட்டி கொடுத்துவிட்டார் என கூறுகிறார்கள்.

தன்னை முதல்வராக்கியவர்களையே காட்டி கொடுத்தவர், இவர்களை காட்டி கொடுக்க எவ்வளவு நேரம் ஆகும். என்னை காப்பாற்ற யாருக்கும் துரோகம் செய்வேன் என்பதுதான் அவர் இயல்பு.ஜெ. மரணத்தை கொச்சைப்படுத்தியவர் இது தெரியாமல் அரிச்சந்திரன், காந்தி பேரன், தியாகி போலவெல்லாம் அவரை போகஸ் செய்தனர்.

தெய்வம், தெய்வம் என்று யாரை கூறினாரோ அவர் மரணத்தையே கொச்சைப்படுத்தியவர் ஓபிஎஸ். விசாரணை கமிஷன் அமைக்க காரணமாக இருந்தவர். அவர் செய்த பாவங்கள் அவரை விடாது. இன்னும் தொடரும் என காட்டமாக பேசினார்.