மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில் ஆகஸ்ட் 14ம் அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார். மீண்டும் ஆகஸ்ட்18 ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த மாத இறுதியில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் அமித்ஷாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.