Asianet News TamilAsianet News Tamil

மக்கள் நலனைவிட தீதிக்கு தலைகனம் ஓவர்.. இது சில்லி பிஹேவியர்... வெளுத்து வாங்கிய அமித்ஷா..

மம்தாவின் நடத்தை துரதிர்ஷ்டவசமானது என்றும், பொது நலனை விட, தான் என்ற ஆணவமே அவரிடம் மேலோங்கி இருக்கிறது என்பதை அவரின் அற்பத்தனமான நடவடிக்கைகள் காட்டுகிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கியுள்ளார். 

Didi has ego above then public welfare.. This is silly behavior. Amit Shah ..
Author
Chennai, First Published May 29, 2021, 10:47 AM IST

மம்தாவின் நடத்தை துரதிர்ஷ்டவசமானது என்றும், பொது நலனை விட, தான் என்ற ஆணவமே அவரிடம் மேலோங்கி இருக்கிறது என்பதை அவரின் அற்பத்தனமான நடவடிக்கைகள் காட்டுகிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கியுள்ளார். பிரதமர்  மோடியுடனான ஆய்வுக் கூட்டத்தை புறக்கணித்து மம்தா அவமரியாதை செய்துள்ள நிலையில், அமித்ஷா இவ்வாறு விமர்சித்துள்ளார். 

வங்கக்கடலில் உருவான யாஸ் புயலால் ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை இவ்விரு மாநிலங்களிலும் சேர்த்து நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் மட்டும் கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் வீடுகள் இழந்து தவித்து வருகின்றனர். கிட்டதட்ட 3 லட்சம் வீடுகள் புயலால் சேதமடைந்துள்ளது. மம்தா பானர்ஜி  நிவாரணமாக 15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் ஒரிசா மற்றும் மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகளை பிரதமர் மோடி நேற்று நேரடியாக ஆய்வு செய்தார். அதற்கு முன்னதாக சூறாவளி புயல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மேற்கு வங்கத்தில் மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கலைகுண்டா விமானதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

Didi has ego above then public welfare.. This is silly behavior. Amit Shah ..

திட்டமிட்டபடி பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் தொடங்கியது, ஆனால் ஆய்வுக் கூட்டம் தொடங்கி அரை மணி நேரம் ஆகியும் மம்தா பானர்ஜி மற்றும் மேற்கு வங்க அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, பின்னர் அரை மணி  நேரம் கழித்து மம்தா, மேற்குவங்க அதிகாரிகள் கூட்டத்திற்கு வந்தனர். ஆனால் அங்கு வந்த உடனேயே மம்தா பேனர்ஜி சில ஆவணங்களை தனது அதிகாரிகளிடம் வழங்கிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார். பிரதமர் மோடியை அரை மணி நேரம் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கூட்டத்திலிருந்து உடனடியாக மம்தா வெளியேறிய சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரதமரை அவமதிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் மம்தா செயல்பட்டிருக்கிறார் என பலரும் அவருக்கு எதிராக கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.

Didi has ego above then public welfare.. This is silly behavior. Amit Shah ..

அந்தவகையில், நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களை நலனைவிட ம ம்தாவுக்கு தான் என்ற தலைகணமே மலோங்கியுள்ளது என விமர்சித்து டுவிட் செய்துள்ளதார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டில்: தீதியின் நடத்தை துரதிர்ஷ்டவசமானது, யாஷ் சூறாவளி மக்களை கடுமையாக பாதித்துள்ளது, அவர்களுக்கு உதவ வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். தற்போதைய சூழ்நிலையில் மக்கள் நலனை காட்டிலும் தீதிக்கு தலைகனம் மேலோங்கியுள்ளது என்பது அவரின் இந்த அற்பத்தனமான நடவடிக்கைகள் அப்பட்டமாக காட்டுகிறது.எனவிமர்சித்துள்ளார். 

Didi has ego above then public welfare.. This is silly behavior. Amit Shah ..

மேலும் இது குறித்து தெரிவித்துள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்:  பேரழிவு காலத்தில் வங்காள மக்களுக்கு உதவி வழங்கும் உணர்வுடன் வந்த  பிரதமரிடம் மம்தாவின் இதுபோன்ற நடத்தை வேதனையானது, அரசியல் வேறுபாடுகளை தாண்டி அரசியலமைப்பு சட்டப்படி நாம் ஆற்ற வேண்டிய கடமைகளுக்கு இது எதிரானது. எனக் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து தெரிவித்துள்ளார் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா:  பிரதமர் மோடி எப்போதும் மேற்குவங்க மக்களுடன் உறுதியாக நிற்கிறார். மம்தா ஜி தனது ஈகோவை மக்களின் நலனுக்காக ஒதுக்கி வைக்க வேண்டும், பிரதமர் மந்திரி கூட்டத்தில் அவர் இடம்பெறாதது அரசியலமைப்பு தன்மை மற்றும்  கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது, இது ஒரு கூட்டாட்சித் தத்துவத்தின் படுகொலை என விமர்சித்துள்ளார்.

Didi has ego above then public welfare.. This is silly behavior. Amit Shah ..

மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர்:  பிரதமரின் மறுஆய்வுக் கூட்டத்தில் முதல்வரும், அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தால் மாநில மற்றும் அதன் மக்களின் நலன்களுக்கு உதவியிருக்கும். முரண்பாடான நிலைப்பாடு அரசுக்கோ அல்லது ஜனநாயகத்தின் நலன்களுக்கோ உதவாது. முதல்வர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்காதது அரசியலமைப்புவாதம் அல்லது சட்டத்தின் ஆட்சிக்கு உகந்ததாக இல்லை என கூறினார் 
 

Follow Us:
Download App:
  • android
  • ios