Asianet News TamilAsianet News Tamil

ஒன்றிய அரசுன்னு நீங்க சொன்னா அதிகாரங்கள் குறைஞ்சிடுமா..? மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன்.!

 ஒன்றிய அரசு என்று சொல்வதால் இந்திய அரசின் அதிகாரங்கள் குறைந்துவிடப் போவதில்லை என்று கோவை தெற்கு பாஜக எம்.எல்.ஏ.வும் பாஜக தேசிய மகளிரணி தலைவியுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
 

Did you tell the Union government to reduce the powers ..? Vanathi Srinivasan reply to MK Stalin!
Author
Chennai, First Published Jun 24, 2021, 9:04 PM IST

தமிழக சட்டப்பேரவையில் ‘ஒன்றிய அரசு’ என்று அழைப்பது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று விளக்கம் அளித்தார்.  “கூட்டாட்சி தத்துவத்தின் கீழ்தான் ஒன்றியம் என்ற வார்த்தை இடம்பெறுகிறது. எனவே தொடர்ந்து அதை நாங்கள் பயன்படுத்துவோம்'' என்று ஸ்டாலின் கூறினார். இந்நிலையில் இதுதொடர்பாக கோவை தெற்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.  “தேர்தல் முடிவு வெளியான நாளிலிருந்து சமூக ஊடகங்களில் பிரிவினை உள்நோக்கத்துடன் திமுக ஆதரவாளர்கள்‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார்கள். பிறகு தமிழக அரசும் இதையே பயன்படுத்தி வருகிறது.Did you tell the Union government to reduce the powers ..? Vanathi Srinivasan reply to MK Stalin!
இதுபற்றி சட்டப்பேரவையில் பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “நமது அரசியலமைப்புச் சட்டத்தில், இந்தியா, அதாவது பாரதம் - மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்" என்றுதான் உள்ளது. அதைத்தான் பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை. கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருப்பதால் ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
 இந்தியா என்கிற பாரத நாட்டின் நிர்வாக வசதிக்காகவே மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை மாநில அரசு பிரிப்பதைப் போல, இந்திய அரசு நிர்வாக வசதிக்காக மாநிலங்களை இரண்டு அல்லது மேலும் பல மாநிலங்களாகப் பிரிக்க முடியும். ஆனால், இந்தியா என்ற பாரத நாட்டை யாராலுமே பிரிக்க முடியாது. இந்தியாவிலிருந்து பிரிந்துகொள்கிறோம் என்று மாநிலங்கள் எதுவும் கூற முடியாது. அப்படி கூறினால் அதுதான் பிரிவினைவாதம்; தேசத் துரோகம்.Did you tell the Union government to reduce the powers ..? Vanathi Srinivasan reply to MK Stalin!
 எனவே, முதல்வர் கூறியதுபோல கூட்டாட்சி தத்துவத்திற்காகத்தான் ஒன்றிய அரசு என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால் பிரச்சினை கிடையாது. ஒன்றிய அரசு என்று சொல்வதால் இந்திய அரசின் அதிகாரங்கள் குறைந்துவிடப் போவதில்லை. ஆனால் ஒன்று, இவ்வளவு விளக்கம் அளித்த முதல்வர் மத்திய அரசு அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்று விளக்கம் அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios