எனக்கு என்ன தேவை இருக்கிறது நான் பணிந்து போய் உட்கார வேண்டிய அவசியமே கிடையாதே. 

நான் யாருக்கும் பணிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் அவதூறு பரப்புகிறார்கள். கை கட்டுவது என்னுடைய மேனரிசம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சமீபத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை பார்ப்பதற்காக அவரது இல்லத்திற்கு சென்று இருந்தார் விடுதகை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். அங்கு ராஜகண்ணப்பன் விலையுயர்ந்த சோபாவில் அமர்ந்திருக்க திருமாவளவன் உடைந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார். கைகட்டி தன்மையுடன் அமர்ந்திருப்பதை போல புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அரசியலுக்கு உட்பட்ட பார்வையில் பார்க்கும் பொழுது திருமாவளவன் அவர்களுக்கு இந்த இருக்கை சற்று குறைவானதே. இதன் விவரம் என்ன? உங்களை திட்டமிட்டு பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார வைத்ததாக புரிந்துகொள்ளப்படுகிறது. இயன்றால் இதன் உண்மைத் தன்மையை தெளிவுபடுத்துங்கள் என பலரும் கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்துள்ள திருமாவளவன், ‘’அந்த ப்ளாஸ்டிக் சேரை நானே தான் இழுத்துப்போட்டு உட்கார்ந்தேன். எனக்கு என்ன தேவை இருக்கிறது நான் பணிந்து போய் உட்கார வேண்டிய அவசியமே கிடையாதே. குதர்க்கவாதிகள், காழ்ப்புணச்சி கொண்டவர்கள்,விடுதலை சிறுத்தைகள் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் ஏதாவது சேரு பூச வேண்டும் என நினைக்கிறார்கள்.

அதனை நான் ஓருபோதும் பொருட்படுத்த மாட்டேன். எனது நலனில் அக்கறை உள்ளவர்கள் கேட்டால் நான் பதில் சொல்வேன். எனது அம்மா முன்னால் கைகட்டி நிற்பேன். எனது தோழர்கள் முன்னால் கைகட்டி நிற்பேன். இது என்னுடைய மேனரிசம் அது. இதைக்கூட புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றால் அவர்களது இயலாமை, ஆற்றாமையை காட்டுகிறது’’ என விளக்கமளித்துள்ளார்.