2021  சட்டமன்ற தேர்தலில்  நான் போட்டியிடும் தொகுதி குறித்து தலைமை தான் முடிவு செய்யும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

ஈரோடு மாவட்டம், பவானியில் திமுக மாநில  மாணவரணி துணை செயலாளர் ரங்கசாமி  என்பவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உயிரிழந்தார். அவரது படத்திறப்பு விழாவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உயிரிழந்த ரங்கசாமி படத்தைத் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் நடிகர் விஜயின் தந்தை ஆரம்பித்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படுமா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், அதனை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.

அதன் பின்னர் வரும் தேர்தலில் நீங்கள் போட்டியிடும் தொகுதி என்ன என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, வரும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடும் தொகுதி குறித்து  தலைமைதான் முடிவு செய்யும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் இளைஞரணி மாநில துணை செயலாளர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பாரி, துரை ஆகியோர் கலந்துகொண்டனர்.

விஜய் நடித்த குருவி படத்தை தயாரித்தவர் உதயநிதி. அப்போது முதலே விஜய் புகழ் பாடி வந்தார் விஜய். எப்படியும் விஜயை அரசியலுக்கு கூட்டி வந்து தனக்கு அனுக்கிரஹமாக இருக்க வேண்டும் என இதற்கு தூபம் போட்டதே கருணாநிதி தான். ஆனால், அப்போது முதல் விஜய் இதற்கு உடன்படவில்லை.   அதன் பிறகு சன் பிக்சர்ஸ் மூலமாக விஜய் நடித்த பல படங்கள் தயாரிக்கப்பட்டன. அப்போதும் விஜய் திமுகவுக்கு இசைவு கொடுக்கவில்லை. சன் டிவி மூலம் விஜய்க்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டபோது, என்னை பழிவாங்க என் முகமே தேவைப்படுகிறதா? என சன் பிக்சர்ஸுக்கு எதிராக முழங்கினார் விஜய். 

இந்த பிர்சனைக்கு பிறகும் விஜயை சமாதானப்படுத்தி சன்பிக்சர்ஸ் விஜயை வைத்து படங்கள் தயாரித்தன. தளபதி பட்டம் கொடுத்து உசுப்பேற்றின. ஆனாலும் விஜய்க்கு விருப்பமில்லை. விஜய்க்கு விருப்பமெல்லாம் தானே ஒரு கட்சி ஆரம்பித்து தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதாகவே இருக்கிறது. இதனை உணர்ந்து கொண்ட திமுக தரப்பு, இப்போது விஜய் மற்றும் அவரது தந்தைக்குள் விவகாரத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எஸ்.ஏ.சியை கட்சியை ஆரம்பிக்க தூண்டியதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு விஜய் உடன்படவில்லை. 

மகனே ஒத்துக்கொள்ளாவிட்டாலும் மனைவி ஒதுக்கித் தள்ளிய பிறகும் கட்சி ஆரம்பித்தே தீர்வது என்கிற எண்ணத்தை மட்டும் எஸ்.ஏ.சி கைவிடுவதாக இல்லை. இதன் பின்னணியில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. அதனை தான் உதயநிதியின் இந்தப்பேட்டி பிரதிபலிக்கிறது என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.