இந்துக்களை பற்றி மட்டும் பேசும் நீங்கள் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் பற்றி பேசாதாது ஏன் என்கிற கேள்விக்கு நாய், பேய் பற்றி எல்லாம் பேச முடியுமா? என திருமாவளவன் சீறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திருமாவளவன், மனு ஸ்ருமிதி குறித்தும் பெண்கள் குறித்தும் பேசியது ஏன் என்று விளக்கம் அளித்தார். மனுவில் கூறியுள்ளதை தான் கூறினேனே தவிர தனது தனிப்பட்ட கருத்துகள் எதையும் கூறவில்லை என்று திருமா தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், இந்து மதத்தை மட்டுமே பேசும் நீங்கள் கிறிஸ்தவம், இஸ்லாம் குறித்து பேசவில்லையே ஏன் என கேள்வி எழுப்பினார். அதற்கு யாரை பற்றி பேசுவது என்று எனக்கு தெரியும், நாய், பேய் பற்றி எல்லாம் ஏன் பேசவில்லை என்று என்னிடம் கேட்காதீர்கள் என சீறினார்.

இதனால் ஒரு நிமிடம் செய்தியாளர் சந்திப்பு அரங்கம் அதிர்ச்சியாகிவிட்டது. முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் பற்றி கேட்ட போது நாய், பேய் பற்றி பேச முடியுமா? என்று கேட்டால் என்ன அர்த்தம், அப்படி என்றால் அவர்களைத்தான் நாய் பேய் என்று திருமா கூறிவிட்டாரா என சலசலப்புஏற்பட்டது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் திருமா தொடர்ந்து பேசினார். அதாவது தான் இந்து மதத்தை சேர்ந்தவன் என்றும், தானும் தனது பெற்றோரும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்றும் திருமா கூறினார்.

தன்னுடைய சான்றிதழ்களில் தான் இந்து என்றே இருப்பதாகவும் திருமா தெரிவித்துள்ளார். மேலும் இந்து மதம் தன்னுடை மதம் என்பதால் அதில் தன்னை இழிவுபடுத்துவது குறித்து தான் பேசுவதாக விளக்கம் அளித்தார். இந்து மதம் என்னை அடிமையாக வைத்துள்ளது, இந்து மதம் எனது உரிமைகளை பறிக்கிறது, இந்து மதம் பெண்களை கேவலமாக நடத்துகிறது என்பதால் அந்த மதத்தில் உள்ள குறைகளை உரிமையுடன் சுட்டிக்காட்டுவதாக திருமா தெரிவித்தார். முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ மதம் பற்றி தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார்.

முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ மதத்தில் தவறுகள் இருந்தால் அதனை அந்த மத்தில் உள்ளவர்கள் பேசுவார்கள் என்றும் தான் ஏன் பேச வேண்டும் என்றும் திருமா கேள்வி எழுப்பினார். மேலும் இப்படி தான் இந்து மத்தை பற்றி விமர்சிக்கும் போது கிறிஸ்தவ, முஸ்லீம் மதங்களை பற்றி கேள்வி எழுப்புவது திசை திருப்பும் செயல் என்றும் திருமா சாடினார். இந்து மதத்தில் தான் மோசமான சாதிய படிநிலைகள் இருப்பதாகவும், சாதியை அடிப்படையாக வைத்து உயர்வு தாழ்வு கற்பிக்கப்படுவதாகவும் அவர் சீறினார்.

எது எப்படியோ சில நாட்களுக்கு முன்னர் மாற்றுத் திறனாளிகளை பற்றி தவறாக பேசி திருமா வருத்தம் தெரிவித்தார். தற்போது கேள்வி ஒன்றுக்கு ஏடாகூடமாக பதில் அளித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் திருமா. இதற்கெல்லாம் காரணம் அவர் நிதானம் இழந்துவிட்டது தான் என்கிறார்கள்.