எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவரும், புதுக்கோட்டை ஊரக உள்ளாட்சித்துறை உதவியாளருமான முருகானந்தம் வீட்டில் இருந்து கிலோ கணக்கில் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  

எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவரும், புதுக்கோட்டை ஊரக உள்ளாட்சித்துறை உதவியாளருமான முருகானந்தம் வீட்டில் இருந்து கிலோ கணக்கில் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மகன் பயிற்சி எடுக்க பிரத்யேக துப்பாக்கி சுடும் பயிற்சி மையம், மகள் கல்லூரி செல்ல ரூ.70 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் கார், 3 ஆண்டுகளில் வருமானத்தை விட அதிகமாக 1260 சதவிகிதம் சொத்து சேர்ப்பு, ஊரக வளர்ச்சித்துறை உதவியாளர் முருகானந்தத்திற்கு ரூ 16 கோடி சொத்து உள்ளது. அவரது வீட்டில் இருந்து 3.7 கிலோ வெள்ளி, 83 சவரன் தங்கநகை, ரூ.46,160 ரொக்கம், பல லட்சம் மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான முருகானந்தம், தனது சகோதரரை வைத்து ஒப்பந்தங்கள் எடுத்து ஊழல் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. 

ரவிச்சந்திரன், முருகானந்தம் மற்றும் பழனிவேல் இவர்கள் மூன்று பேரும் சகோதரர்கள் ஆவர். இதில் ரவிச்சந்திரன் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பஞ்சாயத்து யூனியன் ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக பணியாற்றி வருகிறார். முருகானந்தம், மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். பழனிவேல் ஒப்பந்ததாரராக இருக்கிறார்.. முருகானந்தத்தின் மனைவி காந்திமதி, முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில், இந்த 3 பேருமே இணைந்து தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி அமைப்புகள் ஆகியவற்றில், எல்இடி தெரு விளக்குகள் அமைக்கும் பணியை எடுத்து செய்துவந்தனர். இதைதவிர, அரசு விளம்பர பதாகைகள் வைக்கும் ஒப்பந்தமும் இவர்களுக்கே கிடைத்து வந்துள்ளது. இதையும் தமிழகம் முழுவதும் செய்து வந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக, முருகானந்தம் தவிர, மற்ற இரு சகோதரர்களும்கூட வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் சகோதரர்கள் 3 பேரிடமும் ரெய்டு நடப்பதால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.