மொழியை வைத்து திமுகவும், பாஜகவும் அரசியல் நடத்தி வரும் நிலையில், சமூக வலைதளமான ட்விட்டரில் #திமுக_வேணாம்_போடா என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. 
 
திரை உலக பிரபலங்கள் சிலர் இந்தி மொழிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டீசர்ட்களை அணிந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. குறிப்பாக டிவிட்டரில் #இந்தி_தெரியாது_போடா என்ற ஹேஷ்டேக் வைரல் ஆனது. 
 
பாஜகவுக்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பை காண்பிக்கும் வகையில் இந்தி மொழிக்கு எதிராக பலர் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.  இந்நிலையில், தற்போது #திமுக_வேணாம்_போடா என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. திமுக அரசியல் ஆதாயத்திற்கு பிற மொழியை இழிவுப்படுத்துவதாகவும், கலாசாரத்தை சீர் குலைப்பதாகவும் பதிவிடப்பட்டு வருகிறது. உன்னோட போதைக்கு நான் ஊறுகாயா? ஆளை விடுங்கடா சாமி #திமுக வேணாம் போடா போன்ற வாசகங்கள் அடங்கிய பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.