பெரியாருக்காக பொங்கி எழும் அரசியல் கட்சி தலைவர்கள் கந்த சஷ்டி கவசம் தந்த முருக பெருமானுக்காக இந்து மக்களின் கடவுளை கேவலப்படுத்தியவர்களை கண்டிக்கவில்லை என குற்றம் சாட்டியிருக்கிறார் ஹெச்.ராஜா.இந்த நிலையில் ஹெச்.ராஜா போட்ட ட்விட்கள் கீழே...

கருப்பர் கூட்டம் என்கிற யூடிப் சேனல் கந்த சஷ்டி கவசத்தை இழிவாக பேசியது முருகனைப் கொரோனா பாதிப்பு, பலி, தடுப்பு நடவடிக்கைகள் ஆகிய செய்திகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. பல்வேறு இந்து அமைப்புகள் இதற்காக கண்டனம் தெரிவித்து வருகின்றார்கள்.
பெரியாருக்காக பொங்கி எழும் அரசியல் கட்சி தலைவர்கள் கந்த சஷ்டி கவசம் தந்த முருக பெருமானுக்காக இந்து மக்களின் கடவுளை கேவலப்படுத்தியவர்களை கண்டிக்கவில்லை என குற்றம் சாட்டியிருக்கிறார் ஹெச்.ராஜா.
இந்த நிலையில் ஹெச்.ராஜா போட்ட ட்விட்கள் கீழே...

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…

கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் மற்றும் இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரிக்கின்றனர் என்பது புகார். ஆகையால் கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து அமைப்புகள் போலீசில் புகார் கொடுத்திருந்தன.இதனையடுத்து கந்த சஷ்டி குறித்த விமர்சனத்துக்காக கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் மன்னிப்பு கேட்டு அந்த வீடியோவை நீக்கியது. இந்த நிலையில் கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் நிர்வாகி சுரேந்திரன் நடராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.இதனிடையே கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலின் நிர்வாகிகளில் ஒருவரான செந்தில் வாசனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட செந்தில் வாசனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.