Asianet News TamilAsianet News Tamil

அதிமுக கூட்டணியில் 40 தொகுதிகள் கேட்டோமா..? பாஜக தலைவர் எல்.முருகன் அதிரடி விளக்கம்..!

அதிமுக கூட்டணியில் 40 தொகுதிகளை பாஜக கேட்கிறதா என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
 

Did AIADMK ask for 40 constituencies? BJP leader L Murugan's Explain ..!
Author
Chennai, First Published Jan 8, 2021, 9:11 PM IST

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, சட்டப்பேரவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும் அந்தத் தொகுதியில் வேட்பாளர் பெயர்களும் அண்மையில் சோஷியல் மீடியாவில் வலம் வந்தன. இந்நிலையில் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் எல்.முருகன் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். “தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்த முத்துராமலிங்க தேவரின் வழியில் பாஜக நடக்கிறது. ரஜினி ஆதரவு தெரிவித்தால் பாஜக வரவேற்கும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து தேர்தல் முடிந்த பிறகு அதுகுறித்து பேசிக்கொள்ளலாம். அஞ்சல்துறை தேர்வில் தமிழ் மொழி சேர்க்கபடும் என மத்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளது. விரைவில் தமிழ் மொழி சேர்க்கப்படும்.Did AIADMK ask for 40 constituencies? BJP leader L Murugan's Explain ..!
தமிழகத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் கிடைக்கவில்லை. தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை எப்படி முடிவு செய்கிறதோ அதன்படியே செயல்படுவோம். அனைத்து கிறிஸ்தவ, முஸ்லீம் சகோதரர்கள் பாஜகவில் ஆர்வமுடன் சேர்ந்துவருகிறார்கள். நாட்டை சரியான பாதையில் பாஜக கொண்டு செல்கிறது. அதிமுக கூட்டணியில் 40 தொகுதிகள் கேட்டோமா என்ற யூகத்திற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. இந்த விஷயத்தில் நாங்கள் நெருக்கடி கொடுக்கவில்லை. தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்” என எல்.முருகன் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios