திமுக.- அதிமுக. வினரோடு தொண்டர்கள் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம். திமுக.நமக்கு எதிர்க் கட்சி, அதிமுக. துரோகி எதிரியை போல் துரோகிகளையும் ஒரு கை பார்க்க வேண்டும் என கட்டளையே போட்டுள்ளார் தினகரன்.

ஜெயலலிதாவின் மரணிக்கும் வரை அதிமுக நிர்வாகிகளை, திமுக பக்கம் நெருங்க விடாமல் பார்த்துக்கொண்டார். ஜெயலலிதா மறைந்ததை அடுத்து ஜெயலலிதாவின் கொள்கைகள், இரும்புக்கோட்டையில் எழுதப்படாத சட்டங்கள் அனைத்தும் சுக்குநூறாக உடைத்தெறியப்பட்டது. ஜெ எனும் இரும்பு மனுஷி இருந்தவரை கப்சிப்பென இருந்த இயக்கமானது உள்ளுக்குள்ளேயே முட்டி மோதிக் கொண்ட பல கலவரங்களும் அரங்கேறியது. அந்த பழைய அதிமுகவை தான் சாதாரண தொண்டனும் விரும்பினான். அதேபோல எழுதப்படாத பல சட்டங்களை தினகரனும் செய்ய துடிக்கிறார். ஆனால் விளைவும் செந்தில் பாலாஜி, கலைராஜன், ஆண்டிபட்டி தங்கம் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் கூடாரத்தை காலி செய்தது.

ஆனாலும் தன்னுடைய போக்கை மாற்றிக்கொள்ளாத தினகரன் திமுக.- அதிமுகவினரோடு தொண்டர்கள் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம். திமுக நமக்கு எதிர்க் கட்சி, அதிமுக துரோகி எதிரியை போல் துரோகிகளையும் ஒரு கை பார்க்க வேண்டும் என கட்டளையே போட்டுள்ளார்.

திருவள்ளூர் மத்திய மாவட்ட அமமுக சார்பில் அதிமுக, பாமக, தேமுதிக ரஜினி மக்கள் மன்றம் ஆகிய மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் அமமுகவில் இணையும் விழா வேலப்பன்சாவடியில் மா.செ லக்கிமுருகன் தலைமையில் நடந்தது. இதில் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் முன்னிலையில் மாற்று கட்சியை சேர்ந்த 2000 பேர் அமமுகவில் இனைந்தனர். நிகழ்ச்சியில் சிங்கம் உருவ சிலை, வீரவாள், ஜெயலலிதா உருவ சிலை தினகரனுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில்  பேசிய தினகரன்; அம்மா நம்மோடு இல்லை என்றாலும் அவருடைய திருவுருவத்தையும், திருப்பெயரையும், கொள்கைகளையும் தாங்கியிருக்கிற இயக்கமாக அமமுக. செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்கள் ஜெயலலிதாவையும், அவருடைய கொள்கையையும் மறந்து விட்டார்கள். அவர் வகுத்து தந்த பாதையை விட்டு கட்சியையும், ஆட்சியையும் வேறு திசையில் அழைத்துச் செல்கிறார்கள் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். பாராளுமன்றத் தேர்தலில் நாம் தோல்வியுற்றாலும் அதற்குப் பிறகு இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று நிர்வாகிகள் சிலர் விலகி செல்கிறார்கள்.

 

சிலர் இந்த இயக்கத்தை விட்டு சென்றிருக்கலாம் அவர்கள் சென்றதால் இந்த இயக்கத்திற்கு பாதிப்பு இல்லை. பதவியில் இருந்தவர்கள் சென்றார்கள். உண்மையான தொண்டர்கள் இங்குதான் இருக்கிறார்கள். திமுக - அதிமுகவினரோடு தொண்டர்கள் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம். திமுக நமக்கு எதிரி தான் ஆனால், அதிமுக துரோகி எதிரியை போல் துரோகிகளையும் ஒரு கை பார்க்க வேண்டும் என இவ்வாறு அவர் பேசினார். தினகரனின் இந்த அதிரடியால் நம்ம அம்மா மாதிரியே நம்ம அண்ணனும் ஒன்மேன் ஆர்மியாக இருப்பாரு என அமமுக தொண்டர்கள் பேசிக்கொள்கிறார்களாம்.