தன் மகள் பெயரில் தமிழ்நாட்டில் புதிய கிராமத்தையே போலியாக உருவாக்கி ஃப்ராடுத்தனம் செய்த ராஜா, அதிமுகவின் அஸ்திவாரத்தை  ஆட்டம் காண வைத்துவிட்டார். ஆவின் தலைவர்! எனும் பெரும் பதவி மீதான ஆசையை விடவும் முடியவில்லை. அதனால் செய்தார் பாருங்க ஒரு திருட்டுத்தனம். அதாவது, ‘உப்புக்கோட்டை பேரூராட்சியின் கீழ் ரோஸி நகர் வருவாய் கிராமத்தில் உள்ள பால் கூட்டுறவுச் சங்கத்தின் சேர்மன்.’ என்று தன்னை ஓ.ராஜா குறிப்பிட்டு, தேர்தலில் நின்றுள்ளார்.

ஆனால் உண்மையில் அப்படியொரு கிராமமே இல்லை. ஆமாங்க, ரோஸிநகர் எனும் கிராமமே தேனி மாவட்ட வருவாய் கிராம லிஸ்டில் இல்லை. விஷயம் இப்படி போய்க்கொண்டிருக்க தினகரனுடன் ஓ.ராஜா  ரகசிய தொடர்பு வைத்துள்ளதால்  வெளியே அனுப்பியதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமா அண்ணன் மீதுகோபத்தை காட்ட தினகரனுடன் விரைவில் ஓ.ராஜா இணைய போவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 

இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த, தினகரன் ஜாலியாக பேசினார். முதல்முறையாக தினகரன் அதிமுகவை அமமுகவில் சேருமாறு  அழைத்துள்ளார். அதாவது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் தவிர மற்றவர்கள் அமமுகவுக்கு வரலாம் என்று சொன்னார். வழக்கமாக  அதிமுகவில் இணையும்படி அமமுகவை கூவி கூவி  அழைக்கும் அதிமுகவை அழைத்துள்ளார்.

 ஓ. பன்னீர்செல்வம் குடும்பத்தினர் குறித்த உண்மைகள், இனி ஒவ்வொன்றாக வெளியாகும். என எடப்பாடியை அதிரவைத்திருக்கிறார் தினகரன். ஆமாம், கட்சியிலிருந்து ராஜாவை நீக்கிவிட்டதால் மட்டும் பன்னீரின் கரங்கள் சுத்தமடைந்துவிடவில்லை. அவர் மகன் ரவியின் செயல்பாடுகள் கட்சியின் பெயரைக் கெடுத்துக் கொண்டிருப்பதை கவனிக்க வேண்டும்.’ என்ற ரீதியில் அடுத்த வெடியை கொளுத்திப் போட்டிருக்கிறார்.  

தேனி மாவட்டத்தின் ஆற்றுப் படுகைகளில் லாரி லாரியாய் மணல் திருடுகிறார் பன்னீர் தம்பி ராஜா. இதற்கு எதிராக குரல் கொடுத்த பார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகி தாக்கப்பட்டதோடு, ‘ராஜா அண்ணனை பகைச்சேன்னா இருக்கமாட்டல’ என்று கொலை மிரட்டலுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கிறார். கூலிப்படையை கொண்டு அவரை தாக்கியது ராஜாவின் வேலைதான். ராஜாவின் மணல் திருட்டு வேலையும், அதை எதிர்ப்பவர்களை கூலிப்படை கொண்டு விரட்டும் செயலும் தென் மாவட்டத்தில் பன்னீர் செல்வத்தின் மீதும் , கட்சியின் மீதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தம்பிதான் இப்படி என்றால் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தும் இதே ரூட்டில்தான் வில்லங்கம் வளர்க்கிறார். திருநெல்வேலியில் உள்ள தனது மாமனார் ஊரின் அருகே ஓடும் தாமிரபரணி ஆற்றில் இருந்து ரவி தரப்பு மணல் கடத்தி விற்கிறது. தினமும் லாரி லாரியாய் பல லோடுகளை கடத்தி, பணத்தை அள்ளிக் குவிக்கிறார். இந்த திருட்டுத்தனம் சமீபத்தில் போட்டோ மற்றும் ரவியின் பெயரோடே வெளியாகியது. துணை முதல்வரின் மகனே இப்படி செய்வதால் எங்களால்  தடுக்க முடியல! என்று அதிகாரிகளே அழுகின்றனர். 

ஆக மொத்தத்தில் தென் தமிழ்நாடு முழுக்க துணை முதல்வர் பன்னீரின் குடும்பம் அசிங்கப்பட்டு கிடப்பதோடு, அவரால் கட்சியின் பெயரும் களங்கப்பட்டு நிற்கிறது. மணல் திருட்டு, கூலிப்படை ஏவுதல், தற்கொலை, கொலை மிரட்டல் அப்படின்னு சகல புகார்களிலும் பன்னீரின் குடும்பத்தினரின் பெயர் வெளிப்படையாக அடிபடுவதால் தெற்கே கட்சியின் நிலை சீரழிகிறது. இதனால்தான் ஓ.பன்னீர் செல்வத்தின் குடும்பத்தை ‘தேனி மாஃபியா’ என்று அழைக்கிறோம். ” என அதிமுகவினர் சொல்லும் அளவிற்கு பன்னீர் பேமிலி செம்ம மாஸ்.  தினகரனின் இந்த பேட்டியால் அதிமுக மட்டுமல்ல எடப்பாடியே யோசிக்கும் அளவிற்கு நிலைமை போய்க்கொண்டிருக்கிறது. எலக்ஷனுக்குள் என்ன வேணும்னாலும் நடக்கலாம்...