Dhinakaran camp to go to catch 10 MLA for Dismiss the rule
18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்குக்குப் பிறகு ஆட்சி ஆட்டம் கண்டு விடும். மக்களை சந்திக்கும் இந்த இடைப்பட்ட நேரத்தில் பத்து எம்.எல்.ஏக்கள் நம்முடைய அணிக்கு வர இருக்கின்றனர் அடுத்த அதிரடியை தனது பேச்சில் வைத்திருந்தார் தினகரன்.
தஞ்சை வடக்குப் பகுதியில் நேற்று முதல் அரசியல் பயணத்தில் மக்களை சந்தித்து வருகிறார் தினகரன். இந்த பயணம் முடியும் நாளில் ஆட்சிக்கு கொடுத்த கெடுவை கெடுவை அறிவிப்பாரா என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.
.jpg)
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருந்தார் தினகரன். அப்படி புதிய கட்சியை தொடங்கினால் அ.தி.மு.கவை நாம் சொந்தம் கொண்டாட முடியாது. 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் நமக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும், அதிமுகவையே நம்மால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும், இன்னும் கொஞ்சம் நாட்கள் தனிக்கட்சி என்ற பேச்சுக்கு போகவேண்டாம் சசிகலவிடமிருந்து தினகரனுக்கு ஆர்டர் வந்திருக்கிறது.
.jpg)
அதே போல தினகரனும், நம்மை நம்பி வந்த ஆதரவாளர்கள் தேர்தலில் அதிக எண்ணிக்கையில் வெற்றி வெற்றி கிடைக்கணும், நீதிமன்றத்திலும் அரசு இயந்திரத்தை வைத்து பெருமளவில் வெற்றி பெற்றுவிடுவார்கள். ஆர்.கே நகரில் வென்றதைப்போல, தமிழகம் முழுவதும் வெல்ல ஆர்.கே.நகர் தான் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கப்பட்டது. அதனால் குக்கர் சின்னம் வாங்கி அதிலேயே நின்று போட்டியிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம் தினகரன். அதேபோல, தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொள்வதில் உறுதியாக இருக்கிறாராம் என்ற விஷயத்தையும் சசிகலா கவனத்துக்கும் எடுத்துச் சென்றுள்ளனர்.
.jpg)
இதனால் தான் தினகரன் மீது கடும் கோபத்தில் இருந்திருக்கிறார் சசிகலா. என்னதான் தினகரனுக்கு ஆதரவாக திவாகரன் பேசினாலும், சசிகலாவை ஓரம்கட்டிவிட்டு தாமே முதல்மையாக இருக்கவேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம் தினகரன். அதுமட்டுமல்ல, ஆர்.கே.நகர் வெற்றிக்குப் பின் மக்களும் தன்னுடைய தலைமையை ஏற்க தயாராக இருப்பதாக முழுமாக நம்புகிறாராம். தினகரனின் இந்த பிளானை அறிந்து கொண்ட இளவரசி குடும்பத்தினர் தினகரனை எதிர்க்க துணிந்தனர். தினகரனுக்கு ஆதரவாக சித்தப்பு நடராஜனும், மாமா திவாகரனும் தினகரன் பக்கமே நிற்கிறார்கள். தினகரனின் சமீபத்திய செயல்பாடுகளை கண்காணித்த திவாகரனும் அதிமுக அமைச்சர்களுக்கு தூது அனுப்பியிருக்கிறார்.
.jpg)
அது என்னன்னா? ஆட்சியை நீங்களே நடத்திக் கொள்ளுங்கள். இந்த ஆட்சிக்கு எங்களால் எந்தவிதச் சிக்கலும் ஏற்படாது . ஐந்து ஆண்டு ஆட்சி முடியும் வரை எங்களால் ஆட்சிக்கு எந்த பிரச்சனையும் வராது. இது விஷயமாக சசிகலாவிடம் பேசுகிறோம். நீங்க கவலை படாமல் இருங்க ஆனால் கட்சியின் அதிகாரம் எங்களின் கட்டுப்பட்டுக்கு வந்தால் இதெல்லாம் நடக்கும் என சொன்னாராம்.
திவாகரனின் இந்த டிமாண்டை எதிர்பார்க்காத அமைச்சர்கள் . திவாகரனுக்கு எதிராகக் கொந்தளித்தார். ஆனால் சில அமைச்சர்களோ கட்சியை திவாகரன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான திரைமறைவு வேலைகள் வேலை பார்த்து வருகிறார்களாம்.
.jpg)
திவாகரனின் இந்த பிளானை அறிந்த தினகரனோ, திவாகரன் நடவடிக்கைகளுக்கு எதிராக காய் நகர்த்தல்களை செய்து வருகிறார். 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சாதகமாகத் தீர்ப்பு வந்தாலும், மேலும், பல நாட்களாக சொல்லிவரும் தனக்கு ஆதவான சில அமைச்சர்கள் MLA க்கள் என இருப்பவர்களை வெளியில் கொண்டு வர திட்டம் போட்டுள்ளாராம், இதுவரை தினகரனின் முயற்சிக்கு 6 எம்.எல்.ஏக்கள் சம்மதம் சொல்லியிருக்கிறார்களாம். அப்படி மொத்தம் பத்து க்கள் வரும் பட்சத்தில் ஆட்சி கவிழும், விரைவில் தேர்தலும் வரும் என ஆதரவாளர்களிடையே பேசி வருகிறாராம்.
.jpg)
அதேபோல சமீபத்தில் திடீரென தினகரன் ஆதரவாளர் அவதாரத்தை எடுத்திருக்கும் சசிகலா புஷ்பா. ஏன் இந்த திடீர் மாற்றம்? என்று கேட்டால் தென் தமிழகத்தை சேர்ந்த பெரும் ஆலை அதிபரான வைகுண்டராஜனை கை காட்டுகிறார்கள் விபரம் அறிந்தவர்கள். வி.வி.மினரல்ஸ் எனும் மணல் ஆலை அதிபர் இவர்.
ஏனாம்? அதாவது தாது மணல் பிஸ்னஸின் மூலமாகத்தான் தாறுமாறாக வளர்ந்தார் வைகுண்ட ராஜன். அரசாங்கத்துக்கே ஸ்பான்சர் செய்யுமளவுக்கு அவரிடம் மணல் போல் கொட்டிக் கிடக்கிறது கரன்ஸி. இந்நிலையில் தாது மணல் ஆலைகளை இயக்க அரசு விதித்த தடையை இன்னமும் விலக்கிக் கொள்ளவில்லை. இதனால் வைகுண்டராஜனின் பிஸ்னஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாம். பல முறை பல முக்கிய நபர்களிடம் தூது விட்டும் சாதகமான பதில் இல்லையாம்.
.jpg)
ஆக இதில் கடுப்பானதால் சசிகலா புஷ்பாவை தினகரன் ஆதரவாளராக மாற்றி, ஆளும் தரப்புக்கு கடுப்பை கிளப்பியிருக்கிறார் வைகுண்டராஜன் என்கிறார்கள். இத்தோடு நிறுத்தவில்லையாம், அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏதேனும் கொண்டுவரப்பட்டால் அப்போது தினகரனுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்களை திருப்ப, உசுப்ப முழுமையாக ஸ்பான்சர் செய்ய தயார் என்றும் வி.வி.மினரல்ஸ் தரப்பு கூறியிருக்கிறதாம்.
ஆக அரசுக்கு கடுக்காய் கொடுக்கும் வைகுண்டராஜனின் முக்கிய மூவ்களில் ஒன்றே சசிகலா புஷ்பா, தினகரனின் ஆதரவாளராக மாறிய சசிகலா புஷ்பாவும் தன் பங்கிற்கு பத்துக்கும் மேற்பட்ட mla க்களை இழுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம்.
இதில் என்ன டிவிஸ்ட்னா? தினகரனுக்கு ஆதரவாக வருபவர்கள் ஆளும்கட்சி மீது அதிருப்தியில் உள்ள இந்த எம்.எல்.ஏக்களின் சிலர், முதல்வரின் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் எடப்பாடி அணிக்கு தினகரன் கொடுக்கும் அதிர்ச்சி. 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு வருவதற்குள் இந்த பத்து எம்.எல்.ஏக்களை வெளியில் கொண்டு வர தீவிரமாக இறங்கியிருக்கிறாராம் தினகரன்.
