AIADMK with 50 MPs from the state which does not come with a plan that said Dayanidhi Maran

அதிமுகவில் 50 எம்பிக்கள் இருந்தும் தமிழகத்தில் எந்த ஒரு திட்டமும் கொண்டு வரவில்லை என தயாநிதிமாறன் பேசினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் பொதுக்கூட்டம் சென்னை ஏழுகிணறு பகுதியில் கொண்டாடப்பட்டது. இதில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான தயாநிதி மாறன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, தயாநிதிமாறன் பேசியதாவது:-

இன்றைய அரசியல் சூழலில், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், மக்களை கண்டு ஓடி ஒளிந்து கொள்கிறார்கள். மக்களை சந்திக்கவே அச்சமடைந்துள்ளனர். அதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமே மக்களை சந்தித்து, குறைகளை தீர்த்து வைக்கின்றனர்.

40 எம்பிக்கள் திமுகவுக்கு இருந்தபோது தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டனர். ஆனால் அதிமுகவில் 50 எம்பிக்கள் இருந்தும் தமிழகத்தில் எந்த ஒரு திட்டமும் கொண்டு வரவில்லை.

ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வந்தபோது அதிமுகவினரே அதனை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இவ்வாறு அவர் கூறினார்.