அடுத்த ஆண்டு  நடைபெறவுள்ளன மக்களவைத்  தேர்தலில் யார் யாரோடு கூட்டு சேரலாம்? யாருக்கு எத்தனை தொகுதிகளை பிடித்துக் கொள்ளலாம் என அரசியல் கட்சிகள் தீவிரமாக வேலை பார்த்து வருகிறது.

ஜெயலலிதா மறைவ்ர்க்குப் பின் ஆர்கே நகரை தவறவிட்டதும்,  திமுக  சரியாக தேர்தல் வேலை பார்க்கவில்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. வெடி வாய்ப்பு இருந்தும் இப்படிப்பட்ட தோல்வி  திமுகவை பதம் பார்த்தது , இந்நிலையில் கருணாநிதியின் மறைவிற்குப் பின் தலைவரான ஸ்டாலின் மக்களவைத் தேர்தலில்  அதிகமான தொகுதிகளை ஜெயிக்க காய் நகர்த்தி வருகிறார்.  

இதனால், மக்களவைத் தேர்தலுக்கு அக்கட்சி வேகமாகத் தயாராகி வருகிறது. கடந்த 17ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக உயர்நிலை செயல் திட்டக் கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது, தேர்தல் வியூகம், கூட்டணி அமைப்பது போன்றவை குறித்து ஸ்டாலின் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது. மூன்றே நாட்களில் நேற்று  தமிழகம், புதுச்சேரி உட்பட 40 மக்களவை தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.

ஒவ்வொரு தொகுதிகளுக்கு இரண்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 80 பேர்கள் அடங்கியுள்ள இந்தப் பட்டியலில் பூங்கோதை ஆலடி அருணா, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகிய இருவர் மட்டுமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் குறித்த முதற்கட்ட ஆலோசனையும் அறிவாலயத்தில் நடைபெற்றுள்ளது. அதன்படி, மத்திய சென்னையில் தயாநிதி மாறன், தூத்துக்குடியில் கனிமொழி, ஸ்ரீபெரும்பதூரில் டி.ஆர்.பாலு, அரக்கோணத்தில் ஜெகத்ரட்சகன், தஞ்சையில் பழனிமாணிக்கம் மற்றும் நீலகிரியில் ஆ.ராசா ஆகியோர் வேட்பாளர்களாக  அறிவிக்க திமுக திட்டமிட்டுள்ளதாம்.  

ஆமாம் எதற்காக இந்த அவசர அறிவிப்பு எனக் கேட்டால், கூட்டணி கட்சிக்கு தொகுதியை ஒதுக்கும் சமயத்தில், எந்த குழப்பமும் வந்துவிடக்கூடாது. அதேபோல கூட்டணி கட்சிகள் இந்த தொகுதிகளை கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே  ரிசர்வேஷன் செய்து வைத்துவிட முடிவு செய்துவிட்டதாம் திமுக.

கனிமொழி தவிர மற்றவர்கள் அனைவரும்  அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட   தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டவர்கள். இதுவரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துவரும் கனிமொழி வரும் தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தூத்துக்குடியில்  வெங்கடேசபுரம் கிராமத்தை கனிமொழி தத்தெடுத்துள்ளது அவருக்கு நல்ல செல்வாக்கை பெற்றுத் தந்துள்ளதால் அனுத்த அடியை எடுத்து வைத்துள்ளார் கனிமொழி.