நான் அரசியலுக்கு வந்ததற்கு ஓ.பி.எஸ் தான் காரணம் என, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரிலுள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த தீபா, மொத்த அவல நிலைக்கும் ஒ.பி.எஸ் மற்றும் அவர் நடத்திய தர்ம யுத்தமே காரணம் என குற்றம்சாட்டினார். அரசியல் நோக்கத்திற்காவே அவர் தர்மயுத்தம் செய்ததாகவும், சசிகலா குடும்பத்தினரை கட்சியில் சேர்க்கமாட்டோம் என்ற நிலையிலிருந்து, அதிமுக தற்போது பின்வாங்கி வருவதாகவும் தீபா விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய ஆவர், சசிகலா குடும்பத்தினர்தான், தங்களை, ஜெயலலிதாவை பார்க்கவிடாமல் தடுத்ததாக குற்றம்சாட்டினார். வெளி உலகத்திலிருந்தும், குடும்பத்திலிருந்தும் ஜெயலலிதாவை, சசிகலா குடும்பத்தினர்தான் தனிமைப்படுத்தியதாகவும் அவர் கூறினார். சசிகலா குடும்பத்தினரால் பலமுறை, தான் அவமானப்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டிய ஜெ. தீபா, போயஸ் தோட்ட இல்லம் தங்களது உடமையல்ல; உரிமை என கூறினார்.