பிரதமர் நரேந்திர மோடி திருக்குறளை அதி அற்புதமான ஊக்குவிப்பு நூல் என புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில், ’’தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள  இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன்.

 

திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும்.  உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும்  கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும்’’ என அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது முக்கிய உரைகளில் திருக்குறளையும், தமிழ் மொழியையும் புகழ்ந்து பேசி வருகிறார். கறுப்பர் கூட்டம் கந்த சஷ்டி கவசத்தையும், இந்துக்கடவுளையும் அவமானப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ள நிலையில் பிரதமர் மோடி திருக்குறளை பெருமைப்படுத்தியுள்ளார்.