தாராபுரம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சிவகாமி உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்த சம்பவம் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவகாமி(60). 2001ல் பாமக சார்பில் தாராபுரம் தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பின்னர், 2003ல் அதிமுகவில் இணைந்தார். அன்று முதல் அதிமுகவிலேயே இருந்து வந்தார். 

இந்நிலையில், ஆஸ்துமா நோயாமல் அவதிப்பட்டு வந்த சிவகாமி தனது வீட்டில் இருந்தபடியே மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிவகாமி தன் வீட்டில் இருந்த போது நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார். இவர் இறுதி சடங்குகள் இன்று நடைபெறுகிறது. மறைந்த சிவகாமிக்கு வின்சென்ட் என்ற கணவரும், அபிராமி, உமாசங்கரி என்ற 2 மகள்களும், சுரேஷ், ராஜ்குமார், சுதாகர் என்ற மூன்று மகன்களும் உள்ளனர்.