இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அதிமுகவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதாலும், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாலும் ஏன் உங்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என கருணாஸ் உட்பட 4 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில்வள்ளுவர்கோட்டம்பகுதியில்நடைபெற்றஆர்ப்பாட்டத்தில்முதலமைச்சரை அவதூறாகபேசியதாகஎம்.எல்.ஏ. கருணாஸ்மீதுவழக்குதொடரப்பட்டது. இந்தவழக்கில்கைதுசெய்யப்பட்டகருணாஸ்தற்போதுநிபந்தனைஜாமீனில்வெளிவந்துள்ளார்.

கருணாசின்பேச்சுக்குபலரும்கண்டனம்தெரிவித்துஇருந்தநிலையில், அவர்எம்.எல்.ஏ.வாகநீடிக்கவேண்டுமா? எனபலரும்கேள்விஎழுப்புவதாகஅமைச்சர்ஜெயக்குமார்தெரிவித்துஇருந்தார்.

இந்நிலையில், அதிமுககட்சியின்சார்பில்போட்டியிட்டுஎம்.எல்.ஏ. பதவியில்உள்ளகருணாஸ் , டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு அளித்து வரும் அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ரத்தன சபாபதி, கள்ள்க்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ கலைச் செல்வன் ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து சபாநாயகர்தனபாலுடன்சட்டத்துறைஅமைச்சர் சி.வி.சண்முகம்ஆலோசனைநடத்தினார்.

மேலும் இவர்கள் 4 பேரும் அதிமுக சார்பில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆகி தற்போது அந்த கட்சிக்கு எதிராக நடத்து கொள்வதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து கருணாஸ் உட்பட 4 எம்எல்க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
