சட்டசபையில் நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு கோரும் நிகழ்ச்சியில் கடும் அமளி ஏற்பட்டது.சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது.

இதனால் கோபமடைந்த சபாநாயகர் சபையை விட்டு வெளியேறினார்.

மதியம் ஒரு மணி வரை சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய பெரும்பான்மையை நிருபிக்க இன்று சட்டசபை கூடியது.

கடந்த 11 நாட்களாக மக்கள் விருப்பத்துக்கு மாறாக அதிமுக தொண்டர்களின் எண்ணத்திற்கு மாறாக மறைந்த முதல்வர் ஜெ. வின் எண்ணத்திற்கு மாறாக குறுக்கு வழியில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வருவதாக ஓபிஎஸ் தரப்பினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

தங்களுக்கே முழு ஆதரவு உள்ளது. ஓபிஎஸ் துரோகி என்றெல்லாம் எடப்பாடி தரப்பில் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்த விவகாரத்தை திமுக உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்படியை எதிர்த்து வாக்களிக்க போவதாக திமுக காங். அணிகள் தெரிவித்தன.

ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்ற ஓபிஎஸ்ஸின் கோரிக்கையை தானும் ஆதரிப்பதாக ஸ்டாலின் தெரிவத்தார்.

இந்நிலையில் இன்று சட்டசபை கூடியது. அவை கூடியது முதல் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக ஓபிஎஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து அவை நடத்த விடாமல் ரகளை ஏற்பட்டது.

ரகசிய வாக்கெடுப்பு நடத்த முடியாது என்று சபாநாயகர் தெரிவித்தார்.

இதையடுத்து சட்டசபையில் கடும் ரகளை ஏற்பட்டது.

சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு திமுக உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

அவருடய மைக் உடைக்கபட்டது. சட்டபேரவை செயலாளர் ஜமாலுதீன் அமர்ந்த நாற்காலியும் உடைக்கபட்டது.

இதையடுத்து கோபமடைந்த சபாநாயகர் சபையை விட்டு வேகமாக வெளியேறினார்.

பின்னர் சபை 1 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இன்று நடந்த ரகளையில் திமுக எம்எல்ஏ பூங்கோதை மேஜையின் மீது ஏறி நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் சபாநாயகர் சென்றவுடன் அவரது இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார்.

இதையெல்லாம் தடுக்க முடியாமல் முதல்வர் எடப்பாடி, முன்னவர் செங்கோட்டையன் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.