dhanabal forgive 7 dmk mla
சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட 7 திமுக எம்.எல்.ஏ.க்கள், அமளி குறித்து வருத்தம் தெரிவித்ததை அடுத்து அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
ஜெ. மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் முதல்வராக தேர்வு செய்யபட்டார். சசிகலா அதிமுக பொது செயலாளர் ஆனார். முதல்வர் ஓபிஎஸ்க்கு எதிராக அமைச்சர்களே பேட்டி அளித்ததும் முதல்வராக சசிகலாவே கூறியதும் பிரச்சனையை ஏற்படுத்தியது.
திடீரென எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி முதல்வராக சசிகலாவை அறிவித்தனர். இதை அடுத்து ஏற்பட்ட பிரச்னையில் ஓபிஎஸ் வெளியேறினார்.
.jpg)
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவே பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைத்ததார். இதையடுத்து பிப்ரவரி 18 ஆம் தேதி அன்று சட்டசபையில் தனது பெரும்பான்மையை எடப்பாடி பழனிசாமி நிருபித்தார்.
அப்போது சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது. இந்த அமளியின்போது திமுக எம்எல்ஏக்கள், சபாநாயகரை கேரோ செய்தனர். போலீசார் சட்டசபைக்குள் வரவழைக்கப்பட்டு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வெளியேற்றபட்டனர்.
இந்த விவகாரம் குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அம்பேத்குமார், கே.எஸ்.மஸ்தான், முருகன், கு.க.செல்வம், என்.சுரேஷ்ராஜன், க.கார்த்திகேயன், கே.எஸ்.ரவிச்சந்திரன் ஆகிய 7 திமுக எம்எல்ஏக்கள் மீது புகார் அளித்தார். இந்த புகார் உரிமை குழுவுக்கு அனுப்பப்பட்டது.

இந்த புகாரின் மீது 7 திமுக எம்எல்ஏக்கள் விளக்கம் அளித்தனர். இந்நிலையில் விசாரணைக்கு பின் உரிமை குழு அறிக்கையை பொள்ளாச்சி ஜெயராமன் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, 7 திமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் இல்லை என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். திமுக உறுப்பினர் 7 பேரும் வருத்தம் தெரிவித்ததால், எச்சரிக்கை விடுத்து மன்னிப்பு வழங்கியதாக சபாநாயகர் கூறியுள்ளார்.
சபாநாயகரின் இந்த அறிவிப்புக்கு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
