dhanabal asking to give fishes to mla in assembly

சட்டமன்ற மீன்வளத்துறை மானிய கோரிக்கையின்போது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீன்களை வழங்கலாமே என சபாநாயகர் தனபால் கிண்டலடித்தார், இதை கேட்டு, பேரவையில் இருந்த அனைவரும் சிரித்தனர்.

சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டம் இன்று 3வது நாளாக நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக திமுகிவினரின் கோரிக்கைகளை பேச அனுமதிக்காததால், திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். 

சட்டமன்றத்தில் இன்று மீன்வளத்துறை மீதான மானிய கோரிக்கை நடந்தது. அதில், மீனவளத்துறை அமைச்சர் ஜெயகுமார், மீனவர்களுக்கான சலுகைகள் குறித்து பேசினார்.

அப்போது பேசிய ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை, இடிந்தகரை பகுதி மீனவர்களுக்கு உரிய நிவாரணமும், சலுகையும் வழங்க வேண்டும் என கேட்டார். மேலும், இடிந்தகரை பகுதியில் கிடைக்கும் மீன்கள் சுவையாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

இதை கேட்ட சபாநாயகர் தனபால், இடிந்தகரை மீன்கள் சுவையாக இருக்குமானால், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கலாமே என, எம்எல்ஏ இன்பதுரையிடம் கேட்டார். இதை கேட்டதும், பேரவை முழுவதும் சிரிப்பலை எழுந்தது.