நடிகர் ரன்வீர் சிங்குக்கு 'தாதா சாகிப் பால்கே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பத்மாவத் திரைப்படத்தில் சிறப்பான  நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. இந்த தகவலை
ரன்வீர் சிங்குக்கு  தேர்வுக்குழு கடிதம் மூலம் அறிவித்தது.

தாதா சாகிப் பால்கே  நாசிக்கில் பிறந்தார். 1885ஆம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்.

இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தாதா சாகேப் பால்கே. இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.

தொடக்கத்தில்  இவரது இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல. ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன. பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார்.

படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார் பால்கே. எனவே முதல் இந்திய சினிமா ஒரு குடும்பப் படமே ஆகும்.

இதையடுத்து அவருடைய நினைவாக தாதா சாகிப் பால்கே விருது  நிறுவப்பட்டது. இந்த  விருது இந்திய திரைப்டத்துறையில்  வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய  அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் ரன்வீர் சிங்குக்கு 'தாதா சாகிப் பால்கே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பத்மாவத் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. 

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் சித்தூர் ராணி பத்மினியின் கதை 'பத்மாவதி' என்ற பெயரில் தீபிகா படுகோனே - ஷாகித் கபூர், ரன்வீர் சிங் உள்ளிட்டோரின் நடிப்பில் இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டது.

இந்த படத்துக்கு ராஜபுத்திர வம்சத்தினர் இடையே எழுந்த எதிர்ப்பு காரணமாக பல்வேறு மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டது. சென்சார் போர்டும் அனுமதி மறுத்தது. இதனால் படத்தின் பெயர் 'பத்மாவத்' என்றும் காட்சிகளில் மாற்றம் செய்தும் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து சென்சார் போர்டு அனுமதி வழங்கியது.

இந்த படத்துக்கு ராஜஸ்தான், குஜராத் மாநில அரசுகள் இந்தப் படத்தை திரையிட தடை விதித்து உத்தரவிட்டன. 

இந்த தடையை நீக்க கோரி பத்மாவத் படத்தின் தயாரிப்பாளர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு கடந்த ஜனவரி 25-ம் தேதி நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பத்மாவத் படத்தை திரையிட அனுமதியளித்து உத்தரவிட்டது.

கடும் எதிர்ப்புக்கு இடையில் வெளியான பத்மாவத் படம் நல்ல விமர்சனங்களை பெற்றதுடன், வசூலிலும் 300 கோடி ரூபாய்க்கும் மேல் குவித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜி வேடத்தில் நடித்த ரன்வீர் சிங் சிறந்த நடிப்புக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வாகியுள்ளார். இதையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.