நாடாளுமன்றத் தேர்தலில் சென்னை மண்டலம் மற்றும் கோவை மண்டலத்தில் கணிசமான வாக்கு வங்கியை பெற்றுள்ள கமல் அடுத்ததாக தென் மாவட்டங்களை குறி வைத்துள்ளார்.

தேவர்மகன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கமல் தென் மாவட்டங்களில் பட்டி தொட்டியெங்கும் பிரபலம். தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் தேவர்மகன் படத்திற்குப் பிறகு கமல் தங்களது சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆகவே கருதினர். எனவே பலரும் அவரது வீட்டில் தற்போது வரை தேவர்மகன் கமல் புகைப்படத்தை வைத்து இருக்கின்றனர்.

இந்த அளவுக்கு தன் மாவட்டத்தில் தேவர் சமுதாயத்தினர் உடன் கண்டிப்பாக இருந்த நிலையிலும் நடந்து முடிந்த தேர்தலில் பெரிய அளவில் அங்கு கமல் கட்சியால் வாக்குகளை பெற முடியவில்லை. எனவே தென் மாவட்டங்களில் தான் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற தேவர்மகன் 2 திரைப்படம் உதவும் என்று கமல் கருதுகிறார். ஏற்கனவே தேவர் மகன் திரைப்படம் நிச்சயம் உருவாகும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தனது அரசியல் வாழ்விற்கும் உதவும் என்கிற சூழலில் தேவர்மகன் 2 திரைப்படம் பணிகளை விரைந்து தொடங்க கமல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேவர் மகன் திரைப்படத்தில் தன்னுடன் பணியாற்றிய கலைஞர்களுடன் கமல் கடந்த இரண்டு நாட்களாக பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது. முன்னதாக படத்திற்கு தேவர் மகன் இரண்டு என்ற பெயர் சூட்டப்படாத வேறு பெயர் வைக்கப்படும் என்று கமல் கூறியிருந்தார்.

ஆனால் தற்போது தேவர் மகன் இரண்டு என்கிற பெயரிலேயே படத்தை உருவாக்க கமல் ஆலோசித்து வருவதாகவும் விரைவில் முடிவெடுத்து அறிவிக்க உள்ளதாகவும் சொல்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் அதனூடே தேவர்மகன் 2 படப்பிடிப்பு பணிகளையும் துவங்குவார் என்றும் இந்தியன் 2 பட பணிகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் கூறுகிறார்கள்.