தமிழகத்தில் 1.03 லட்சம் கோடி நிதியில் ​புதிய சாலைகள் அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2021 - 2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பட்ஜெட்டில் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரங்கள்:

* சுயசார்பு ஆரோக்கிய திட்டத்திற்கு ரூ.64,180 கோடி ஒதுக்கீடு.

* நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்துக்கு 1.41 லட்சம் கோடி ஒதுக்கீடு

* உற்பத்தி துறைக்கு ரூ.1.10 லட்சம் கோடி.

* கொரோனா தடுப்பூசிக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.35 ஆயிரம் கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு

* உள்கட்டமைப்பு வசதிகளுக்கு இந்தாண்டு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

* மூலதன செலவினங்களுக்கு ரூ.5.45 கோடி ஒதுக்கீடு.

* மூலதன செலவினங்களுக்கு மாநில அரசுகள், அதிகார அமைப்புகளுக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு.

* சுகாதாரத்துறைக்கு ரூ.2.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு. இது கடந்தாண்டை விட 137 சதவீதம் அதிகமாகும்.

* காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ரூ.2,217 கோடி ஒதுக்கீடு

* ரயில்வே துறை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.1.10 லட்சம் கோடி

* பேருந்து வசதிகள் மேம்பாட்டிற்கு ரூ.18 ஆயிரம் கோடி

* வங்கியின் டெபாசிட் கணக்குகளுக்கு காப்பீடு ஒரு லட்சம் ரூபாயில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிப்பு.

* அரசு வங்கிகளுக்கு மத்திய பட்ஜெட்டில் கூடுதல் முதலீடாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு.

* மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி.

* கல்வித்துறையில் ஆராய்ச்சிக்கு ரூ.50 ஆயிரம் கோடி.

* புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டுக்கு ரூ.1,500 கோடி.

* சூரிய ஆற்றல் கழகத்திற்கு ரூ.1,000 கோடி.

* டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ரூ.3,768 கோடி ஒதுக்கீடு.

மின்சாரத் துறைக்கு ரூ. 3.05 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு; அடுத்த 5 ஆண்டுகளில்  உற்பத்தித் துறைக்கு ரூ.1.97 ட்ரில்லியன் நிதி

* பழங்குடியின மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகைக்காக ரூ.35.219 கோடி ஒதுக்கீடு

* மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை டிஜிட்டல் முறையில் செய்ய ரூ.3,768 கோடி ஒதுக்கீடு 

* மேற்கு வங்கத்தில் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.25,000 கோடி ஒதுக்கீடு

* ரூ.2,000 கோடியில் 7 துறைமுக திட்டங்கள் செயல்படுத்தப்படும்