கொரோனா பாதிப்பால் உலகமே முடங்கியிருக்கும் சூழலில் கொரோனா மக்களுக்கு பெரும் பாடத்தை நடத்தியுள்ளதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியாமல் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகள் கடுமையாக போராடி வருகின்றன. வல்லரசு நாடென்று சொல்லப்படும் அமெரிக்கா கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ,000 தாண்டியுள்ளது. உலகளவில் இதுவரை 85,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதேபோல இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளும் தவித்து வருகின்றன.  

அதேபோல், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,194-ஐ தாண்டியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 149ஆக உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றனர். 

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது டுவிட்டர் பக்கத்தில்;- உலகை அழித்து முடிக்க வேண்டுமென்றால் ஐந்து நாட்களிலேயே செய்து காட்டிருப்பார்கள். காப்பாற்ற வேண்டும் என்றவுடன் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அறிவியல் எப்போதும் அறவியலாகத்தான் இருக்கவேண்டுமேயொழிய அழிவியலாக இருக்கக் கூடாது. கொரோனோ நமக்கு நடத்தியிருக்கும் பெரும்பாடம். அனைவரும் கற்போம்!’ என பதிவிட்டுள்ளார்.