தகுதிவாய்ந்த நபருக்கு இலவச வீட்டு வசதி வழங்கப்படுமென பட்ஜெட் உரையில் துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார் .  2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதிமுக அரசு தனது இறுதி முழு பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது .  தேர்தலை மையமாக கொண்டு பல்வேறு நலத்திட்டங்களைஅது அறிவித்துள்ளது . இந்நிலையில்  தமிழகத்தில் 2020- 2021 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் . 

அப்போது பேசிய அவர்,  இந்த பட்ஜெட்டில் தகுதிவாய்ந்த நபர்களுக்கு இலவச வீட்டு வசதி வழங்கப்படுமென கூறினார்.  அதேபோல் அடிப்படைகளில் ஒன்றான குடிமராமத்து பணிகளுக்காக சுமார் 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த துணை முதலமைச்சர்,   தமிழகத்தில் வீட்டு வசதி வாரியத்திற்கு உலக வங்கியிடமிருந்து கடன் பெறப்பட்டுள்ளது என்றார். அதே போல்   சுகாதாரத் துறைக்கு 15 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

 

வீட்டு வசதி இல்லாமல் தவித்து வரும் தகுதிவாய்ந்த நபர்களுக்கு இலவச வீட்டு வசதி வழங்கப்படும் என்று அவர் அப்போது அறிவித்தார். ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்த 1, 28, 463 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரத்து 40 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும் என்றும் ஒபிஎஸ் கூறினார்.  மீதமுள்ள குடும்பங்களுக்கு  ஆகஸ்ட் மாதத்திற்குள் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும் வேண்டும் என்றும் அப்போது  அவர் கூறினார்.