அதிமுக மிகப்பெரிய இயக்கம், அதனை யாரும் வீழ்த்த முடியாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அதிமுக மிகப்பெரிய இயக்கம், அதனை யாரும் வீழ்த்த முடியாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்;- அதிமுக மிகப்பெரிய இயக்கம், அதனை யாரும் வீழ்த்த முடியாது. திமுகவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தவே எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். தவறான வழியைப் பின்பற்றும் திமுகவினால் எக்காலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படாது. 

முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். இந்தியாவிலேயே முதலீட்டுக்கு ஏற்ற முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டை விளங்கச் செய்தது அதிமுக அரசு. தமிழக மாணவர்கள் நலன் கருதி கல்வித்துறைக்கு அதிகளவு நிதி ஒதுக்கியவர் ஜெயலலிதா. வீடு இல்லாத ஏழை மக்களுக்காக தற்போது வரை 6 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், கிராமசபைக் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் தான் நடத்த வேண்டும். கிராமசபைக் கூட்டம் நடத்த ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.