அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆனால், ஓபிஎஸ் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு முழு பரிசோதனை முடிந்ததும் இன்று மாலையே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும்  மருத்துவ வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆனாலும், ஓபிஎஸ் பரிசோதனைக்காக மருத்துவமனையில் சென்றிருந்தாலும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.