Asianet News TamilAsianet News Tamil

ஓ.பி.எஸின் பிரச்சார வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து..!

உதகை அருகே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பிரச்சார வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பிரச்சாரத்திற்காக கொண்டுவரப்பட்ட போது சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது. விபத்து நேர்ந்த போது பிரச்சார வாகனத்தில் ஓபிஎஸ் இல்லை. மேலும் வாகனத்தில் இருந்த ஓட்டுநர் சிறிய காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். 

Deputy Chief Minister OPS vehicle accident
Author
Tamil Nadu, First Published Apr 4, 2019, 1:00 PM IST

உதகை அருகே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பிரச்சார வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பிரச்சாரத்திற்காக கொண்டுவரப்பட்ட போது சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது. விபத்து நேர்ந்த போது பிரச்சார வாகனத்தில் ஓபிஎஸ் இல்லை. மேலும் வாகனத்தில் இருந்த ஓட்டுநர் சிறிய காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அரசியல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பிரச்சாரம் செய்ய ஏதுவாக தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Deputy Chief Minister OPS vehicle accident

வழக்கமாக அரசியல் தலைவர்கள் ஒரு இடத்திற்கு பிரச்சாரத்திற்கு செல்லும் போது அவர்களுக்கு ஏதுவாக பிரச்சார வாகனம் முன்கூட்டியே அந்த பகுதிக்கு சென்றுவிடும். இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கூடலூர் பகுதியில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். இதனையடுத்து சென்னையில் இருந்து பிரச்சார வாகனம் கொண்டு செல்லப்பட்டது. ஊட்டியை நேற்று இரவு 9 மணிக்கு பிரச்சார வாகனம் சென்றடைந்தது.

 Deputy Chief Minister OPS vehicle accident

இந்நிலையில் ஊட்டியில் இருந்து இன்று காலை கூடலூருக்கு அந்த வாகனம் எடுத்துச்செல்லப்பட்டது. கூடலூர் சாலைப்பகுதி மிகவும் சரிவான மலைப்பகுதி என்பதால் முன்கூட்டியே வாகனத்தை கொண்டு சென்றனர். இந்த வாகனத்தில் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் மட்டுமே இருந்துள்ளனர். ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் வழியில் நடுவட்டம் என்னும் பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. Deputy Chief Minister OPS vehicle accident

இதில் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். இதனையடுத்து மாற்று வாகனத்தில் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios