Deposit to stay in jail for Maduhoda Coal mining scam case appeal

நிலக்கரி சுரங்கங்களை முறைகேடாக ஒதுக்கீடு செய்த வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டின்போது இந்த தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

சிபிஐ வழக்கு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இதில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

புகார் விவரம்

நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் நிறுவனத்திற்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி நிலக்கரி சுரங்கங்களை இந்த தனியார் நிறுவனத்திற்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

சிபிஐ நீதிமன்றம்

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா உள்ளிட்டோருக்கு உள்ள தொடர்பு சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராஷர் கடந்த 13ம் தேதி தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து இவர்களுக்கு கடந்த டிசம்பர் 16ம் தேதி தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது.

தண்டனை நிறுத்தம்

அதில் மதுகோடாவுக்கு 3 ஆண்டு சிறைதண்டனையும், 25 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் மேல்முறையீடு செய்ய மதுகோடாவுக்கு இரண்டு மாத காலம் இடைக்கால ஜாமீனும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் மதுகோடா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனால் மதுகோடாவுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.