அரசு ஊழியரை ஜாதி பெயரை கூறி திட்டிய அமைச்சர் ராஜகண்ணப்பனை ஒரு துறையிலிருந்து வேறொரு துறைக்கு மாற்றம் செய்தது தண்டனை ஆகாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியரை ஜாதி பெயரை கூறி திட்டிய அமைச்சர் ராஜகண்ணப்பனை ஒரு துறையிலிருந்து வேறொரு துறைக்கு மாற்றம் செய்தது தண்டனை ஆகாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக இருப்பவர் ராஜேந்திரன். இவர் அப்பகுதி ஒன்றிய சேர்மன் தருமனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. தருமன் அதிமுகவை சேர்ந்தவர். இந்த நிலையில்தான் முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தனது வீட்டிற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அமைச்சர் வீட்டிற்கு சென்ற ராஜேந்திரனை, அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஜாதி ரீதியாக குற்றஞ்சாட்டியதாக புகார் எழுந்துள்ளது. முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி பெயரை கூறி திட்டிய சம்பவம் முதுகுளத்தூரில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை அடுத்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த நடவடிக்கையை பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், அரசு அதிகாரியை ஜாதி பெயரை சொல்லி திட்டிய அமைச்சர் ராஜகண்ணப்பனை ஒரு துறையிலிருந்து வேறொரு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது தண்டனை ஆகாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. திமுக ஆட்சியில் ரவுடிகளுக்கு சுதந்திரம் கிடைக்கிறது. திமுகவின் முக்கிய நிர்வாகிகளே ரவுடிகள் பட்டியலில் உள்ளதால் ரவுடிகளை கைது செய்ய காவல்துறை அச்சப்படுகிறது.

கைப்பேசி பயன்பாடு அதிகரித்து வருவதன் காரணமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கைப்பேசியில் விரும்பத்தகாத காட்சிகள் வருவதால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரை ஜாதி பெயரை கூறி திட்டியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் துறை மாற்றப்பட்டுள்ளார். அமைச்சரை ஒரு துறையிலிருந்து வேறொரு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது தண்டனை ஆகாது. திமுக அமைச்சர்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு என சொல்லி சிறுமைப்படுத்தி வருவது பிரதமர் மனதை காயப்படுத்தி இருக்கும். தமிழக மக்களின் நலனுக்காக அதிகமான கோரிக்கைகளுடன் பிரதமரை சந்திக்கும் டெல்லி பயணத்தில் முதல்வர் வெற்றி பெற்று வர வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு மத்திய மாநில அரசுகளை கண்டித்து அதிமுக வலுவான அழுத்தம் கொடுக்கும் என்று தெரிவித்தார்.
