மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற உள்ள பேரணியில் கலந்து கொள்ள தரை வழியாக கார் மூலம் செல்கிறார் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.

மேற்கு வங்கத்தில் உள்ள மால்டா மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரனியில் பங்கேற்பதற்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவருடைய ஹெலிகாப்டர் தினஜ்பூர் பகுதியில் தரையிறங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது.

அதனால், பேரணியில் யோகி ஆதித்யநாத் பங்கேற்க முடியாமல் போனது. அதனையடுத்து, தொலைபேசிமூலம் அவர் பேரணியில் பேசினார். இந்தநிலையில், இன்று மீண்டும் மேற்கு வங்க மாநிலத்தின் புருலியா மாவட்டத்தில் நடைபெறும் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பங்கேற்கவுள்ளார். இந்தமுறையும், யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, ஜார்கண்ட்டுக்கு விமானத்தின் மூலம் செல்லும் யோகி, அங்கிருந்து கார் மூலம் புருலியா மாவட்டத்துக்கு செல்கிறார். இன்று மதியம் 1 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.