மதுரையில் டெங்கு காய்ச்சலால் 7 வயது சிறுவன் பலியான சம்பவ  மிகுந்த அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த 20 நாட்களில் 45 பேரை தாக்கியுள்ளதால் சுகாதாரத்துறை விரைந்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் டெங்கு பரவல் அதிகரிப்பது வழக்கம். இந்த முறை துவக்கத்தில் சற்று மெதுவாக பரவியது. அதில் அக்டோபரில் 6 பேருக்கும் நவம்பரில் 14 பாதிக்கப்பட்டனர்.  பின்னர் டிசம்பரில் பரவல் வேகமானது. 

இந்த மாதத்தில் மட்டும் 45 பேரை டெங்கு தாக்கியது. இந்த மாதம் டெங்குவின் வேகம் மன்மடங்கு  அதிகரித்துள்ளது . முதல் 20 நாட்கள் மட்டும் 45 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களிலும் பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது. இதன்  பாதிப்பு பிப்ரவரி மார்ச் வரை நடைபெற இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.  

இந்த நிலையில்  மதுரை எஸ் ஆலங்குளம் பகுதியில் வசித்து வரும்  சத்தியபிரியா என்பவரின்  மூத்த மகன் மிருத்தின் ஜெயன், இரண்டாவது மகன்  திருமலையஸ் ஆகிய இருவருக்கும்  டெங்கு காய்சல் ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இருவரையும்  வயது 9 .வயது மிருத்தின் ஜெயன் எனபவரையும் இரண்டாவது மகன் திருமலையஸ் ( 7 )என்பவரையும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி திருமலையஸ்  சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். ஒரே குடும்பத்தில் இரு சிறுவர்கள் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு 7 வயது சிறுவன் உயிர் பலியானது அப்பகுதி மக்களையும்,  குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தி  உள்ளது.