Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார கட்சி எது ? அதிமுக, திமுக என்ன இடம் தெரியுமா ?

ஜனநாயக சீர்திருத்தம் என்ற அமைப்பு இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளுடைய சொத்து விவரங்களை தணிக்கை செய்து, அறிக்கை வெளியிட்டுள்ளது.

Democratic Reform has released a report auditing the assets of all parties in India
Author
Tamilnadu, First Published Jan 29, 2022, 11:06 AM IST

நாட்டிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட கட்சிகளில் ரூ 4,847.78 கோடி மதிப்பிலான சொத்துக்களுடன் பாஜக முதலிடம் பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் செலவுகளுக்காக நிறுவனங்கள், பொதுமக்களிடம் நிதி வசூலித்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தேர்தல் பத்திரம், காசோலை மூலமாக நன்கொடையாகப் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் அரசியல் கட்சிகள் ஏராளமான சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளன.

Democratic Reform has released a report auditing the assets of all parties in India

இந்நிலையில், ‘ஜனநாயக சீர்திருத்தம்’ என்ற அமைப்பு அனைத்துக் கட்சிகளுடைய சொத்து விவரங்களை தணிக்கை செய்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதில், ‘நாட்டின் 7 தேசிய கட்சிகள், 44 மாநிலக் கட்சிகளின் 2019 - 20ம் நிதியாண்டுக்கான சொத்து மதிப்பு முறையே ரூ 6,988.57 மற்றும் ரூ 2,129.38 கோடியாக உள்ளது. இதில் பாஜக ரூ 4,847.78 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. இது மொத்த தேசிய கட்சிகளின் சொத்துக்களில் 69.37 சதவீதமாகும்.

இதையடுத்து, ரூ 698.33 கோடியுடன் அதாவது 9.99 சதவீதத்துடன் 2வது இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், 8.42 சதவீதத்துடன் ரூ 588.16 கோடி சொத்து மதிப்புடன் காங்கிரஸ் 3வது இடத்திலும் உள்ளன. அனைத்து மாநில கட்சிகளில் முதலிடத்தில் உள்ள 10 கட்சிகளின் சொத்து மதிப்பு ரூ 2,028.715 கோடியாக அதாவது 95.27 சதவீதத்துடன் உள்ளது. 

Democratic Reform has released a report auditing the assets of all parties in India

இதில் சமாஜ்வாடி ரூ 563.47 (26.46%), தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ரூ 310.47, அதிமுக ரூ 267.61 கோடியுடன் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. இதே போல், திமுக ரூ 162.425 கோடி, சிவசேனா ரூ 148.46 கோடி, பிஜூ ஜனதா தளம் ரூ 118.425 கோடியுடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.  மேலும், 44 கட்சிகளின் மொத்த கடன் மற்றும் நிலுவை தொகை ரூ 134.93 கோடியாக உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios