காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. அரசியல் கட்சிகள், விவசாயிகள், மாணவர்கள், திரையுலகினர் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஐபிஎல் எதிர்ப்பு போராட்டம், பிரதமருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம், உண்ணாவிரதம், காவிரி உரிமை மீட்பு பயணம் என ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு வகையில் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.

இந்நிலையில், டெல்டா மாவட்ட விவசாயிகள் சென்னை சேப்பாக்கத்தில் இன்று உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.