Asianet News TamilAsianet News Tamil

டெல்லி வன்முறை பாரத மாதாவுக்கு எந்த நன்மையும் ஏற்படுத்தாது..!! ராகுல்காந்தி காட்டம்.!!

டெல்லி வன்முறை பாதிக்கப்பட்ட இடங்களை ராகுல்காந்தி தனது குழுவினருடன் சுற்றிபார்த்தார். இந்தியாவின் சகோதரத்துவம்,ஒற்றுமை,அன்பு ஆகியவை இங்கே எரிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
 
Delhi Violence Will Not Benefit Bharat Mata .. !! Rahul Gandhi Show. !!
Author
delhi, First Published Mar 5, 2020, 12:45 AM IST

 T.Balamurukan

டெல்லி வன்முறை பாதிக்கப்பட்ட இடங்களை ராகுல்காந்தி தனது குழுவினருடன் சுற்றிபார்த்தார். இந்தியாவின் சகோதரத்துவம்,ஒற்றுமை,அன்பு ஆகியவை இங்கே எரிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

Delhi Violence Will Not Benefit Bharat Mata .. !! Rahul Gandhi Show. !!

இந்திய தலைநகரத்தையை புரட்டி போட்டிருக்கிறது குடியுரிமை திருத்தச் சட்டம். வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை போராட்டங்கள்  இருபிரிவினருக்கும் இடையே நடந்த  போராட்டத்தால் மோதல் வெடித்தது.
மோதல் காரணமாக ஏற்பட்ட வன்முறை ஜாப்ராபாத், மாஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் பரவியது. சில இடங்களில் துப்பாக்கிச்சூடு, படுகாயம்,என இந்த வன்முறையில் ஒரு உளவுப்பிரிவு அதிகாரி உட்பட 49 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில்,இப்பகுதியில் அமைதி திரும்பிய பிறகு, டெல்லியில் வன்முறை பாதித்த பகுதிகளை  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழு இன்று நேரில் பார்வையிட்டது. அருண் நவீன் பொதுப்பள்ளி தீக்கு இறையாகி இருந்தது. இந்த பள்ளி இந்தியாவின் எதிர்காலம் எரிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லி வேதனைப்பட்டார் ராகுல்காந்தி.

Delhi Violence Will Not Benefit Bharat Mata .. !! Rahul Gandhi Show. !!

டெல்லியில் வன்முறை நடந்த இடங்களை பார்வையிட்ட பின் ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் பேசும் போது "தலைநகரில் ஏற்பட்ட வன்முறையால் இந்தியாவின் புகழ் பாதிக்கப்பட்டுள்ளது. சகோதரத்துவம், அன்பு ஆகியவை இங்கு தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. நமது எதிர்காலம் இங்கே எரிக்கப்பட்டு இருப்பதை பார்த்தேன். வெறுப்பும், வன்முறையும் நம்மை அழித்து விட்டது. இந்தியா பிளவுபட்டு வருகிறது. இதனால் யாருக்கும் பலன் கிடைக்கப் போவது கிடையாது. இந்திய அன்னையையும், இந்திய மக்களையும்தான் இது பாதிக்கப் போகிறது” என்று அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios