டெல்லியில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று டெல்லி நேரு பூங்காவில் நடைபயிற்சி சென்ற போது ஏராளமான பொதுமக்கள் ஆர்வமோடு முதலமைச்சர் ஸ்டாலினும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

டெல்லியில் ஸ்டாலின்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

டெல்லியில் தீன் தயால் உபாத்யாயா மார்க் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் உள்ளது. இந்த கட்சி அலுவலகத்திற்கு அருகிலேயே திமுகவிற்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கலைஞர் அண்ணா அறிவாலயம் கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 3 மாடி கட்டிடங்களை கொண்ட டெல்லி அண்ணா அறிவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான கட்டுமான பணிகளை இரண்டு முறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். இந்த நிலையில், கட்டுமானப்பணி முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி அறிவாலயத்தை திறந்து வைக்கவுள்ளார்.

இதற்காக டெல்லி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்ளிட்ட மூத்த அமைச்சர்களையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு அரிசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்தார். முன்னதாக நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலினோடு பல்வேறு மாநில எம்பிக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

செல்ஃபி எடுத்து மகிழ்ந்த டெல்லி மக்கள்

தமிழகத்தில் எந்த ஊருக்கு சென்றாலும் முதலமைச்சர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது ஸ்டாலினை சந்திக்கும் மக்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி அடைவார்கள், இந்த நிலையில் இன்று காலை டெல்லியில் உள்ள நேரு பூங்காவில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் நடைபயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் நடைபயிற்சி மேற்கொண்டார்.

இதனை பார்த்த டெல்லி மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் உடல் நிலை குறித்து கேட்டுக்கொண்ட டெல்லி மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். முதலமைச்சர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுக்க டெல்லி மக்கள் ஆர்வம் காட்டியது அங்குள்ள அரசியல் கட்சிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

"